பி.எம். 2.5 நுண்துகளால் குழந்தைகளுக்கு என்னென்ன பாதிப்பு? - ஆய்வில் தகவல்

காற்றில் உள்ள பி.எம். 2.5 நுண் துகள்களால் குழந்தைகளின் கற்றல் திறனும் நினைவாற்றலும் பாதிக்கப்படுவதாக புதிய ஆய்வு கூறுகிறது.
air pollution
தில்லியில் காற்று மாசு
Published on
Updated on
1 min read

காற்றில் உள்ள பி.எம். 2.5 நுண் துகள்களால் குழந்தைகளின் கற்றல் திறனும் நினைவாற்றலும் பாதிக்கப்படுவதாக புதிய ஆய்வு கூறுகிறது.

நாட்டில் தில்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் வாகனங்களின் பெருக்கத்தினாலும், தொழிற்சாலை புகை மற்றும் கழிவுகள் உள்ளிட்ட காரணங்களினால் காற்று மாசு அதிகரித்துக் காணப்படுகிறது.

அந்தவகையில், காற்றில் உள்ள பி.எம். 2.5 நுண்துகள் மிகவும் பாதிப்பை ஏற்படுத்துபவை. காற்று மாசு அளவை இதைக் கொண்டுதான் கணக்கிடுகின்றனர்.

பி.எம். 2.5 என்பது நுண்துகளின் விட்டம் 2.5 மைக்ரான் அல்லது அதைவிடக் குறைவாக இருப்பது.

நெருப்பில் இருந்து வரும் புகை, குறிப்பாக மரக்கட்டைகளை எரிப்பது, கார் உள்ளிட்ட வாகனங்களில் இருந்து வரும் புகை அதிகரித்தால் காற்றில் பி.எம். 2.5 துகள்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

பி.எம். 2.5 அளவு அதிகரிப்பதால் இருமல், மூச்சுத்திணறல், மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு அதிகபட்சமாக ஆஸ்துமா, மாரடைப்பு பாதிப்பு உருவாகலாம்.

இந்நிலையில் பி.எம். 2.5 துகள் அளவு அதிகமானால் குழந்தைகளிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பி.எம். 2.5 துகளில் உள்ள 15 ரசாயனங்களில் அம்மோனியம் நைட்ரேட் பாதிப்பை ஏற்படுத்தும் முக்கியமான வேதிப்பொருள் என்று கூறியுள்ளது.

கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், அங்குள்ள 9-11 வயதுள்ள 8,600 குழந்தைகளிடம் ஆய்வு நடத்தியது. இதில் காற்றில் உள்ள அம்மனோனியம் நைட்ரேட் குழந்தைகளிடையே கற்றல் திறன் மற்றும் நினைவாற்றலை பாதிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், விவசாயக் கழிவுகளை எரிக்கப்படும்போது வெளியாகும் அம்மோனியா வாயு, வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை உள்ளிட்டவை காற்றில் பி.எம். 2.5 அளவை அதிகரிப்பதாகவும் இதுகுறித்து பெற்றோர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியது.

முன்னதாக, தில்லியில் தீபாவளி அன்று இரவில், பிஎம் 2.5 அளவு இரு மடங்கு அதிகரித்தது. 2022 மற்றும் 2023-இல் காணப்பட்டதைவிட இது 13 சதவீதம் அதிகமாகும். சென்னையிலும் தீபாவளி அன்று நள்ளிரவு முதல் மறுநாள் வரை காற்று மாசு அதிகரித்துக் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com