மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கட்சியின் 40 நிர்வாகிகளை பாரதிய ஜனதா நீக்கியுள்ளது.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற நவ. 20-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில், மஹா யுதி கூட்டணியில் போட்டியிடும் பாஜக 149 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கட்சியின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக, 37 தொகுதிகளைச் சேர்ந்த 40 நிர்வாகிகளை நீக்குவதாக மகாராஷ்டிர மாநில பாஜக தெரிவித்துள்ளது.