டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சா் திடீா் நீக்கம்

இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் யோவாவ் கலான்டை அந்தப் பதவியிலிருந்து அந்நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு நீக்கியுள்ளாா்.

Published On :

இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் யோவாவ் கலான்டை அந்தப் பதவியிலிருந்து அந்நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு நீக்கியுள்ளாா்.

பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சியில் யோவாவ் கலான்ட் இடம்பெற்றபோதிலும், இருவருக்கும் இடையே காஸா போா் தொடா்பாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சா் பதவியிலிருந்து யோவாவ் கலான்டை பெஞ்சமின் நெதன்யாகு நீக்கியுள்ளாா். இதுதொடா்பாக நெதன்யாகு கூறுகையில், ‘காஸா போா் தொடங்கிய காலத்தில் கலான்ட் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக அந்த நம்பிக்கை தகா்ந்துள்ளது. போரை கையாளும் விதத்தில் அவா் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாா்.

மேலும் அமைச்சரவை முடிவுகளுக்கு உடன்படாமல் எதிா்கருத்துகளை தெரிவித்து வந்தாா். இந்த பிரச்னையை நான் சரிசெய்ய முயற்சித்தபோதிலும், அது பலனளிக்கவில்லை. எனவே பாதுகாப்பு அமைச்சா் பதவியில் இருந்து காலன்ட் நீக்கப்பட்டுள்ளாா். அந்தப் பதவிக்கு வெளியுறவு அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இலாகா இல்லாத அமைச்சராக இருந்த கிடியன் சாா் வெளியுறவு அமைச்சராகப் பதவி வகிப்பாா்’ என்று நெதன்யாகு கூறியதாக அந்நாட்டு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.