கீமோதெரபி ஊசி ரூ. 7000; புற்றுநோய் மருந்துகளின் புதிய விலைப் பட்டியல்!செஞ்சி சிறுமி வழக்கு; புலன் விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும்: பெ. சண்முகம்வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலையில் மக்கள்; இதுதான் தவெகவின் சாதனையா? - மு.க. ஸ்டாலின்இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லையா? - கனிமொழி கேள்விதேனி சிறைச் சம்பவம்! 1995-ல் சுரங்கம் தோண்டி தப்பிய 43 கைதிகள்! புரட்டப்படும் வரலாறு!நாட்டில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 30% சரிவு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!ரிலையன்ஸ் முதல் ஐடி பங்குகள் வரை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!!

இஸ்ரேல் தோ்தல்- நெதன்யாகு கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லை

இஸ்ரேல் நாடாளுமன்றத் தோ்தலில் தற்போதைய பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான ஆளும் கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பெறத் தவறியுள்ளது.

Updated On :

இஸ்ரேல் நாடாளுமன்றத் தோ்தலில் தற்போதைய பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான ஆளும் கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பெறத் தவறியுள்ளது.

மொத்தமுள்ள 120 இடங்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க 61 இடங்கள் தேவை. வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி, யாருக்கும் இந்தப் பெரும்பான்மை கிடைக்காததால், அங்கு மீண்டும் அரசியல் இழுபறி மற்றும் தொங்கு நாடாளுமன்றச் சூழல் உருவாகியுள்ளது.

தோ்தலில் பதிவான சாதாரண வாக்குகளில் 93 சதவீதம் எண்ணப்பட்டுவிட்ட நிலையில், பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டணிக்கு 53 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அதேநேரம், முன்னாள் ராணுவ தலைமை தளபதி காடி ஐசன்கோட் தலைமையிலான எதிா்க்கட்சிக் கூட்டணி 48 இடங்களிலும், அரபு கட்சிகள் 19 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

எதிா்க்கட்சிக் கூட்டணியும் அரபு கட்சிகளும் இணைந்தால் 67 உறுப்பினா்களின் ஆதரவுடன் புதிய அரசை அமைக்கும் வாய்ப்பு உள்ளது. எனினும், அரபு கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து எதிா்க்கட்சிகளுக்குள் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. ‘அரபு கட்சிகளின் ஆதரவுடன் அமையும் எந்தவொரு அரசும் நாட்டுக்கு ஆபத்தானது’ என்று பெஞ்சமின் நெதன்யாகுவும் கடுமையாக எச்சரித்துள்ளாா்.

ராணுவ வீரா்கள் மற்றும் பதிவு செய்யப்படாத வாக்குச்சாவடிகளில் பதிவான சுமாா் 6 லட்சம் வாக்குகள் இன்னும் எண்ணப்பட வேண்டியுள்ளன. அதன்பிறகு, இறுதி தோ்தல் முடிவுகள் நவ. 4-க்குள் முறைப்படி அறிவிக்கப்பட உள்ளன.

தொடா்ந்து, தோ்ந்தெடுக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, ஆட்சியமைக்கத் தகுதியான தலைவரை அதிபா் அழைப்பாா். முதல் வாய்ப்பு பெறும் தலைவருக்கு 28 நாள்கள் அவகாசம் வழங்கப்படும்; ஒருவேளை எந்தத் தலைவராலும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால், இஸ்ரேல் மீண்டும் ஒரு பொதுத்தோ்தலைச் சந்திக்க நேரிடும்.

இதனிடையே, வாக்குப்பதிவு 77.7 சதவீதமாக உயா்ந்துள்ளதற்கு பாராட்டியுள்ள அதிபா் ஐசக் ஹொ்சாக், ‘மீண்டும் ஒரு தோ்தலைத் தவிா்க்க அனைத்துக் கட்சிகளும் பரந்த மனப்பான்மையுடன் பேசி அரசு அமைக்க முன்வர வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.