
விடுமுறைக்கு கோவா செல்கிறார்கள் என்று யாராவது சொன்னால் புருவத்தை உயர்த்திய மக்களே, இன்று கோவாவை விட தாய்லாந்தே சூப்பர் என சொல்லுமளவுக்கு பல காரணிகள் அமைந்துவிட்டன.
கோபாவில், கடந்த ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சரிந்திருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து, அங்கு அண்மையில் சுற்றுலா சென்ற மக்கள் பலரும் தங்களின் துயரமான அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருப்பதன் மூலம்தான், பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் கரோனா பொதுமுடக்கத்துக்கு முந்தைய நிலையை கோவா அடையவேயில்லை என்று தகவல்கள் நேற்று வெளியாகின. அதாவது, 2019ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்குமான சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிகக்பெரிய அளவில் சரிவைக் கண்டுள்ளது.
ரஷியர்களும், பிரிட்டிஷ் மக்களும் ஆண்டு தோறும் கோவாவுக்கு சுற்றுலா வருவார்கள். ஆனால், தற்போது அவர்கள் கோவாவுக்குப் பதிலாக இலங்கை செல்வதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதாவது 2019ஆம் ஆண்டு 85 லட்சம் சுற்றுலா பயணிகள் கோவாவுக்கு வந்திருக்கும் நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு இது வெறும் 15 லட்சமாக இருந்துள்ளது.
இந்தியாவின் கோவாவை விடவும், மிகவும் செலவு குறைவாக, வேறு பல கடற்கரை நகரங்கள் இருப்பதால், மக்கள் அங்குச் செல்வதையே விரும்புவதாகவும், கோவாவில் சுற்றுலா பயணிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக டாக்சி மாஃபியா கும்பல் மற்றும் தங்கும் விடுதிக் கட்டணங்களின் விலைகள் போன்றவை மாறிவிட்டிருப்பதை யாருமே தடுக்க முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த செய்திகள் பதிவிடப்படும் சமூக வலைதளப் பக்கங்களில், மக்கள் பலரும், கோவாவில் தாங்கள் சந்தித்த இடர்களை பட்டியலிட்டு வருகிறார்கள். இது ஏதோ தாங்கள் மட்டும் சந்தித்த சிக்கல் என்று நினைத்திருந்த நிலையில், லட்சக்கணக்கானோர் தங்களது பிரச்னைகளை தற்போது ஒரே குரலில் எதிரொலித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.