
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் புதன்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.
ஜம்மு கிஷ்துவார் மாவட்டத்தில் கிராம பாதுகாவலர்கள் நசீர் அகமது, குல்தீப் குமார் ஆகிய இருவரை சுட்டுக் கொன்றதாக பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்புப் படையினர் கூறியதாவது:
பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குப்வாரா மாவட்டத்தில் உள்ள லோலாப் பள்ளத்தாக்கின் மார்கி பகுதியைச் சுற்றி வளைத்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென பாதுகாப்புப் படையினர் மற்றும் பயங்கரவாதி இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது.
இதில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதுடன், ஒரு ஏகே ரக துப்பாக்கி, இரண்டு கையெறி குண்டுகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன என தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





