கேரளம்: கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து -உயிரிழப்பு 5-ஆக உயர்வு!

மேலும் ஒருவர் உயிரிழப்பு, 9 பேரின் நிலைமை கவலைக்கிடம்!
கேரளம்: கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து -உயிரிழப்பு 5-ஆக உயர்வு!
Published on
Updated on
1 min read

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தின் நீலேஸ்வரம் அருகே உள்ள அஞ்சுகூட்டம்பலம் வீரர்காவு கோயில் திருவிழாவில் கடந்த மாதம் 28-ஆம் தேதி நள்ளிரவு பட்டாசுகள் வெடித்ததில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தீக்காயம் அடைந்த 63 பேர் இன்றளவும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ரு வருகின்றனர். அவர்களில் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மங்களூருவிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஜித் என்ற நபர் சிகிச்சை பலனின்றி இன்று(நவ. 9) உயிரிழந்தார். இதனையடுத்து பட்டாசு வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com