
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பிரதமர் நரேந்திர மோடி வாகனப் பேரணியில் ஈடுபட்டார்.
ராஞ்சி தொகுதியில் தொடர்ந்து 6 முறை பாஜக வெற்றி பெற்ற நிலையில், இம்முறை மாநில ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தில் பிரதமர் மோடி வாகனப் பேரணியில் ஈடுபட்டார்.
ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு நவ. 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவு பெறுகிறது.
இதனையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு 3வது முறையாக வருகைபுரிந்துள்ளார்.
இன்று மட்டும் இரு இடங்களில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார்
அப்போது பேசிய அவர், ஓபிசி பிரிவினரிடையே விரிசலை ஏற்படுத்தி ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் துடிப்பதாகவும், இதனால், அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம் எனவும் குறிப்பிட்டார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தில் தேர்தல் பணிகளில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ராஞ்சியில் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாகனப் பேரணியில் ஈடுபட்டார்.
அப்போது சாலையின் இருபுறங்களிலும் மக்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனர். பிரதமர் மோடியின் உருவப் படங்கள் மற்றும் பாஜக கொடியை அசைத்து மக்கள் வரவேற்றனர்.
ராஞ்சி தொகுதியில் போட்டியிடும் சி.பி. சிங் பிரதமர் மோடியுடன் வாகனத்தில் இருந்தார். இவர் 6 முறை இந்தத் தொகுதியில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர். முன்னாள் அமைச்சராகவும் இருந்துள்ளார்.
இதையும் படிக்க | ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம்: பிரதமர் மோடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.