ஆம் ஆத்மியில் இணைந்த காங்கிரஸ் மூத்த தலைவர்!

5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவருமான செளதரி மதீன் அஹமது, ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
செளதரி மதீன் அஹமதுவை ஆரத்தழுவி வரவேற்கும் அரவிந்த் கேஜரிவால்
செளதரி மதீன் அஹமதுவை ஆரத்தழுவி வரவேற்கும் அரவிந்த் கேஜரிவால்ANI
Published on
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவருமான செளதரி மதீன் அஹமது, தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.

தில்லியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஆம் ஆத்மியில் இணைந்துள்ளார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு இவரின் மகன் செளதரி சுபீர் அஹமது மற்றும் அவரின் மருமகள் ஷகுஃப்தா செளதரி ஆகியோர் ஆம் ஆத்மியில் இணைந்ததைத் தொடர்ந்து, தற்போது செளதரி மதீன் அஹமதுவும் இணைந்துள்ளார்.

செளதரி மதீன் அஹமது யார்?

வடகிழக்கு தில்லியின் சீலம்பூர் தொகுதியில் 5 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர் செளதரி மதீன் அஹமது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை சந்தித்து இவரின் மகன் சுபீர் அஹமதுவும் மருமகள் ஷகுஃப்தா ஆகியோர் ஆம் ஆத்மியில் இணைந்தனர். ஷகுஃப்தா கவுன்சிலராக உள்ளார்.

சீலாம்பூர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து அப்துல் ரஹ்மானை போட்டியிட வைக்க ஆம் ஆத்மி திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சீலாம்பூர் தொகுதியில் 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் செளதரி மதீன் அஹமது ஆம் ஆத்மியில் இணைந்துள்ளது அத்தொகுதியில் பலத்தை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள செளதரி மதீன் அஹமது, வளர்ந்துவரும் கருத்தியல் வேறுபாடு காரணமாக இந்த முடிவை நான் எடுத்துள்ளேன். கட்சியும் ஆதரவாளர்களும் என்னுடைய இந்த நடவடிக்கையை புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... டிரம்ப் ஆட்டம் ஆரம்பம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com