
மணிப்பூர் மாநிலம் ஜிரிபம் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் குகி இனத்தைச் சேர்ந்த 11 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட 11 பேரும் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலம் போரோபேக்ரா பகுதியில் வீடுகள் மீது தாக்குதல் நடத்துவது, கடைகளுக்கு தீயிட்டு எரிப்பது போன்ற நடவடிகைகளில் கிளர்ச்சியாளர்கள் ஈடுபட்டனர்.
மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை முகாம் அருகே நடைபெற்ற இந்த அட்டூழியங்களுக்கு வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் இருவர் படுகாயம் அடைந்தனர். இதில் ஒருவர் மிகவும் மோசமான நிலையில் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆயுதக் கிளர்ச்சியாளர்கள் நடத்திய இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வீரர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் குகி இனத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்தனர். இவர்கள் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது.
மேலும், பொதுமக்கள் 5 பேரைக் காணவில்லை என்றும், அவர்கள் கடத்தப்பட்டார்களா? அல்லது மோதலில் தலைமறைவாக உள்ளனரா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதையும் படிக்க | மாணவர் நேரடி சேர்க்கை முறையை ரத்து செய்த கனடா! 90% இந்திய மாணவர்கள் பாதிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.