
ராஞ்சியில் உள்ள வாக்குச் சாவடி மையத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா சோரன் இருவரும் வாக்களித்தனர்.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவில் ஜார்க்கண்ட் மாநில முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் பர்ஹைட் தொகுதி வேட்பாளருமான ஹேமந்த சோரன், அவரது மனைவி கல்பனா சோரன் இருவரும் ராஞ்சியில் உள்ள வாக்குச் சாவடியில் தங்களது வாக்குகளைச் செலுத்தினர்.
ஜாா்க்கண்டில் முதல்கட்டமாக 43 பேரவைத் தொகுதிகளுக்கு இன்று (நவ.13) தோ்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் முதல்கட்டமாக 43 இடங்களில் இன்றும், மீதமுள்ள தொகுதிகளில் நவம்பா் 20-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
தேர்தல் குறித்து முதல்வர் ஹேமந்த் சோரன் கூறுகையில், “நாங்கள் தற்போது எங்கள் வாக்குச் சாவடியில் வாக்குகளைப் பதிவு செய்தோம். நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த ஜார்க்கண்ட் மக்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளேன்” என்றார்.
இந்தத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 13.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், 11 மணி நிலவரப்படி 29.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.