வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. ராஜஸ்தானில் 7, மேற்கு வங்கத்தில் 6, அஸ்ஸாமில் 5, பிகாரில் 4, கர்நாடகத்தில் 3, மத்திய பிரதேசத்தில் 2, சத்தீஸ்கர், குஜராத், மேகாலயா, கேரளம் தலா 1 பேரவைத் தொகுதியில் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

PTI
கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் இன்று (நவ. 13) இடைத்தோ்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஜனநாயகக் கடமையாற்றினர்.
காங்கிரஸ் வேட்பாளா் பிரியங்கா காந்தி, மாநிலத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணி சாா்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சத்யன் மொகேரி, பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் உள்பட 16 வேட்பாளா்களின் வெற்றி நிலவரத்தை இந்தத் தொகுதியிலுள்ள மொத்தமுள்ள சுமாா் 14.71 லட்சம் வாக்காளர்கள் தீர்மானிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
வயநாட்டில் 64.53 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் வெளியிட்டப்பட்டுள்ள முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று 9.45 லட்சம் வாக்காளா்கள் வாக்குப்பதிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது, வயநாட்டில் 72.92 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: சாதனை அளவில் வாக்குப்பதிவு! 9 மணி நிலவரம்!!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு: யாருக்கு சாதகம்?, யாருக்கு பாதகம்?

மேற்கு வங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!
பாப்பிரெட்டிப்பட்டியில் 322 வாக்குச் சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


