பிரதமர் மோடிக்கு டொமினிகா நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருது!

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசி வழங்கி உதவியதற்கு கௌரவிக்கும் விதமாக பிரதமர் மோடிக்கு விருது
பிரதமர் மோடி
பிரதமர் மோடிகோப்புப் படம்
Updated on
1 min read

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தின்போது, டொமினிகா நாட்டுக்கு இந்தியா உதவியதால், பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருதான டொமினிகா விருது வழங்கப்படவுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்டிருந்த 2021 ஆம் ஆண்டு காலகட்டத்தில், பிப்ரவரி மாதத்தில் டொமினிகா நாட்டுக்கு 70,000 டோஸ் அஸ்ட்ராஜெனெகா கோவிட்-19 தடுப்பூசியை பிரதமர் மோடி வழங்கினார். இதன்மூலம், இந்தியா அளித்த தடுப்பூசியை, டொமினிகா தனது அண்டை நாடுகளுக்கும் அளித்து உதவியது.

இந்த நிலையில், தக்க சமயத்தில் டொமினிகா நாட்டுக்கு இந்தியா உதவியதையடுத்து, பிரதமர் மோடியை கௌரவிக்கும் விதமாக, அவருக்கு டொமினிகா நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருதான டொமினிகா விருதை அளிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இந்த விருதை, கயானாவின் ஜார்ஜ்டவுனில் நவம்பர் 19 முதல் 21 வரையில் நடைபெறும் இந்தியா - கரிகாம் (CARICOM - The Caribbean Community and Common Market) உச்சி மாநாட்டின்போது, பிரதமர் மோடிக்கு காமன்வெல்த் டொமினிகா தலைவர் சில்வானி பர்ட்டன் வழங்கவுள்ளார்.

இதுகுறித்து, டொமினிகா பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது, ``கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் டொமினிகாவுக்கு இந்தியா அளித்த ஆதரவையும், காலநிலை பின்னடைவை உருவாக்கும் முயற்சிகள், உலக அளவில் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதில் பிரதமர் மோடியின் பங்கையும் இந்த விருது அங்கீகரிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்பு ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது’’ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com