ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

காற்று மாசு: இருமல், சுவாசப் பிரச்னையால் அவதிப்படும் தில்லி மக்கள்!

தில்லியில் 4-வது நாளாக 'கடுமை' பிரிவில் காற்றின் தரம்!

PTI

Published On :

தில்லியில் தொடர்ந்து 4-வது நாளாக காற்றின் தரம் 'கடுமை' பிரிவில் உள்ளது.

தில்லியில் நிகழாண்டு தீபாவளிக்குப் பிறகு காற்றின் தரம் மிகவும் மோசமானது. தீபாவளிக்கு பட்டாசுகள் விற்பனை செய்ய, வெடிக்க தடை விதித்தும் அங்கு காற்று மாசு அதிகரித்துக் காணப்பட்டது.

காற்று மாசுத் தடுப்பு நடவடிக்கைகளை தில்லி அரசு மேற்கொண்டு வரும் நிலையிலும் இன்று தொடர்ந்து 4-வது நாளாக காற்றின் தரம் இன்று(சனிக்கிழமை) 'கடுமை' பிரிவில் இருக்கிறது.

Story image

இன்று காலை 8 மணி நிலவரப்படி, தில்லியில் காற்றின் தரக் குறியீடு(AQI) 406 ஆகப் பதிவாகியுள்ளது. இதனால் தில்லியில் பெரும்பாலான பகுதிகளில் புகைமூட்டமாகக் காணப்படுகிறது. சாலைகளில் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Story image

காற்று மாசினைக் குறைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் கோபால் ராய் உத்தரவிட்டுள்ளார்.

முறையாக சுத்திகரிக்கப்படாத தொழில்துறை கழிவுகள், கழிவுநீர் வெளியேற்றம், வாகனங்களின் உமிழ்வு, அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகளை எரிப்பது உள்ளிட்டவற்றால் தில்லியில் காற்று மாசு அதிகரித்துக் காணப்படுகிறது.

காற்று மாசினால் இருமல், தொண்டை கரகரப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது.

அவசியமின்றி மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் வரும்பட்சத்தில் முகக்கவசம் அணியும்படியும் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தில்லியில் தற்போதுள்ள காற்று மாசு 25-30 சிகரெட்டுகளை புகைப்பதற்குச் சமம் என்கின்றனர்.

பாகிஸ்தானின் லாகூருக்கு அடுத்தபடியாக உலகளவில் காற்று மாசு அதிகமுள்ள நகரமாக தில்லி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.