ஜான்சி மருத்துவமனையில் விஐபி வரவேற்பு: காங்கிரஸ் கருத்தும் துணை முதல்வர் பதிலும்

ஜான்சி மருத்துவமனையில் விஐபி வரவேற்பு அளிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கருத்து தெரிவித்த நிலையில் துணை முதல்வர் உத்தரவு
பிரஜேஷ் பதக்
பிரஜேஷ் பதக்
Published on
Updated on
1 min read

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி அரசு மருத்துவமனையில், நேரிட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் பலியான நிலையில், அங்கு வந்த தனக்கு விஐபி வரவேற்புக்கான ஏற்பாடுகளை செய்தவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு துணை முதல்வர் பிரஜேஷ் பதக் உத்தரவிட்டுள்ளார்.

பெற்றோர் கண்ணீருடன் கதறிக்கொண்டிருக்கும் போது, துணை முதல்வரை வரவேற்க மருத்துவமனை தயாராகி வருவது குறித்து காங்கிரஸ் விமர்சித்திருந்த நிலையில், இந்த உத்தரவு வெளியாகியிருக்கிறது.

வெள்ளிக்கிழமை இரவு, அரசு மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் அங்கு சிகிச்சை பெற்று வந்த 10 குழந்தைகள் பலியாகின.

நிலைமையை நேரில் ஆய்வு செய்ய துணை முதல்வர் பிரஜேஷ் பதக் இன்று மருத்துவமனைக்கு விரைந்தார்.

அப்போது அவரது வருகையை முன்னிட்டு, மருத்துவமனைக்கு அருகே வரவேற்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனைப் பார்த்த அவர் அதிருப்தி அடைந்தார்.

தொடர்ந்து அவர் வெளியிட்ட விடியோ செய்தியில், நான் ஜான்சி மருத்துவக் கல்லூரிக்கு வருவதற்கு முன்பு, சாலைகளில் பொடிகள் துவப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருந்தது. இதனை நான் மிகவும் கண்டிக்கிறேன், இதனை செய்தவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்துகிறேன், ஒருபோதும் இதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

துணை முதல்வரின் வருகையை முன்னிட்டு, ஜான்சி மருத்துவமனை வளாகம் முழுக்க சுத்தப்படுத்தப்பட்டு அழகாக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கடும் கண்டனம் பதிவிடப்பட்டிருந்தது.

மருத்துவமனை வளாகம் முழுக்க குழந்தைகளை இழந்த பெற்றவர்களும் உறவினர்களும் கண்ணீர்விட்டுக்கொண்டிருக்கும் போது, மருத்துவமனைக்கு வரும் துணை முதல்வரை வரவேற்க வளாகம் தூய்மைப்படுத்தப்படுகிறது என்று விமர்சித்திருந்த நிலையில், துணை முதல்வர், வளாகத்தை சுத்தப்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com