சுநேத்ரா பவாருக்கு துணை முதல்வர் பதவி! சரத் பவார் சொல்வது என்ன?

சுநேத்ரா பவாருக்கு துணை முதல்வர் பதவி அளிப்பது குறித்து சரத் பவார் கூறுகையில்
சரத் பவார்
சரத் பவார்ANI
Updated on
1 min read

மகாராஷ்டிரத்தின் துணை முதல்வராக சுநேத்ரா பவார் பதவியேற்கவிருக்கும் நிலையில், அது பற்றி தன்னிடம் கலந்தாலோசனை செய்யப்படவில்லை என்று சரத் பவார் கூறியிருக்கிறார்.

புதன்கிழமை காலை நிகழ்ந்த விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜீத் பவார் பலியான நிலையில், அவர் வகித்து வந்த துணை முதல்வர் பதவியை அவரது மனைவி சுநேத்ரா பவார் ஏற்கவிருக்கிறார்.

அஜீத் பவார் வகித்து வந்த பதவியை யாருக்குக் கொடுப்பது என்ற முடிவில், நீங்கள் ஓரம்கட்டப்படுவதாக நினைக்கிறீர்களா என்று கேட்டதற்கு, எனக்குத் தெரியவில்லை என்று சரத் பவார் பதிலளித்திருக்கிறார்.

அரசியலுக்கும், குடும்பத்துக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி விழுந்திருப்பது சரத்பவாரின் பேச்சின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

மகாராஷ்டிர துணை முதல்வராக சுநேத்ரா பவார் பதவியேற்கவிருக்கிறார் என்பதை, செய்திகள் மூலமாகத்தான் தான் அறிந்து கொண்டதாகவும் கூறுகிறார்.

அதாவது, பாராமதியில், செய்தியாளர்களை சந்தித்த சவரத் பவார், துணை முதல்வர் பதவியேற்பு விழா பற்றி எதுவும் தெரியாது. அது பற்றி செய்திகள் மூலமாகத்தான் தெரிந்துகொண்டேன். எனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றார்.

மேலும், மகாராஷ்டிர துணை முதல்வராக சுநேத்ராவை பதவியேற்கும் நடவடிக்கைகளில் பிரஃபுல் படேல் மற்றும் சுனில் தத்காரே ஆகியோர்தான் முன்னெடுத்திருப்பார்கள் என்று கருதுகிறேன். இவர்கள் ஏதேனும் ஒன்றை முடிவு செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

அஜீத் பவார், இரு தரப்பையும் ஒன்றிணைக்க நினைத்திருந்தார். அவரது எண்ணம் நிறைவேற வேண்டும் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம். பிப்ரவரி 12ஆம் தேதி இரு அணிகளையும் ஒன்றாக இணைக்கவும் அஜீத் பவார் திட்டமிட்டிருந்தார். ஆனால், கெடுபயனாக அவர் அதற்கு முன்பே நம்மை விட்டுச் சென்றுவிட்டார் என்று சரத் பவார் கூறியுள்ளார்.

ஜன.28ஆம் தேதி நேரிட்ட விமான விபத்தில் துணை முதல்வர் அஜீத் பவார் பலியான நிலையில், தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான மகாராஷ்டிர அமைச்சரவையில், அஜீத் பவாரின் மனைவி சுநேத்ராவுக்கு இடமளிக்க வேண்டும் என்று கோரிக்கைகளை எழுந்த நிலையில், இன்று அவர் துணை முதல்வராக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Summary

Sharad Pawar on giving deputy chief minister post to Sunetra Pawar

சரத் பவார்
தேசியவாத காங்கிரஸ் கட்சி பேரவைத் தலைவராக சுநேத்ரா பவார் தேர்வு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com