மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கார் தீப்பற்றி ஒருவர் பலி!

காரைக் கொளுத்தி தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகம்

News image

கோப்புப் படம்

Updated On :17 நவம்பர் 2024, 6:36 am

பெங்களூருவில் கார் தீப்பற்றி, தொழிலதிபர் பலியான சம்பவத்தில் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

பெங்களூருவின் முதீன்பால்யா அருகே கார் ஒன்று தீப்பிடித்து எரிவதாக, சனிக்கிழமையில் (நவ. 16) காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்தை அடைந்த காவல்துறையினர், தீப்பிடித்த காரை தீயணைப்புத் துறையினர் உதவியுடன் அணைத்தனர். இருப்பினும், காரினுள் இருந்த நபர் மூச்சுத் திணறல் காரணமாக பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார்.

தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், உயிரிழந்தவர் 42 வயதான தொழிலதிபர் பிரதீப் என்பது தெரிய வந்தது. மேலும், பிரதீப் தானே காருக்கு தீவைத்து எரித்து, தற்கொலை செய்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். காருக்குள் இருந்து தற்கொலைக் குறிப்புகள் எதுவும் கிடைக்காத நிலையிலும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.