பாட்னாவில் மருத்துவமனையில் உயிரிழந்தவரின் கண்ணை எலி கடித்து விட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் கூறியதால், உயிரிழந்தவரின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர்.
பாட்னாவில் ஃபண்டுஷ் என்பவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக நாளந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி, ஃபண்டுஷ் வெள்ளிக்கிழமை (நவ. 15) உயிரிழந்தார்.
இரவு வேளை ஆனதால், அவரது உடலை உடற்கூறாய்வு செய்யாமல், தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே வைத்தனர். இதனையடுத்து, மறுநாள் சனிக்கிழமை காலையில், ஃபண்டுஷின் இடது கண் காணாமல் போய்விட்டது. இந்த சம்பவத்தையடுத்து, ஃபண்டுஷின் குடும்பத்தினர் மருத்துவமனை வளாகத்திற்குள் போராட்டம் நடத்தினர்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... அரசு மருத்துவமனைகளின் இன்னொரு பக்கம்!
தொடர்ந்து, நாளந்தா மருத்துவமனை கண்காணிப்பாளர் வினோத் குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், அவரும் விசாரணை மேற்கொண்டார். ஃபண்டுஷ் கண் காணாமல் போனது குறித்து மருத்துவமனை அதிகாரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஃபண்டுஷ் கண்களின் மீது ஒரு எலி இருந்ததாகவும், கண்ணை எலி கடித்திருக்கலாம் என்றும் கூறினர்.
இருப்பினும், ஃபண்டுஷ் படுக்கையின் அருகே ஒரு கத்தி இருந்ததாகவும், மருத்துவர்கள்தான் அவரது கண்ணை திருடியுள்ளதாகவும் ஃபண்டுஷின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, கண்காணிப்பாளர் வினோத் குமார் ``கண்ணை வெளியே எடுத்திருந்தாலும் சரி, எலி கடித்திருந்தாலும் சரி. அது நம்முடைய தவறுதான். சிசிடிவி காட்சிகளை மதிப்பாய்வு செய்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாப்ரி மருத்துவமனை வளாகத்தில் தீ விபத்து!

பிகாா் மருத்துவமனை தீ விபத்து: உயிரிழப்பு 7-ஆக அதிகரிப்பு

13 வெளிநாட்டினா் உள்பட 15 பேருக்கு மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை

பிகார்: இடிந்து விழுந்த 10 ஆண்டுகள் பழமையான பாலத்தின் தூண்கள்!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



