குஜராத், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் குறித்த ‘சபா்மதி ரிப்போா்ட்’ திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், ‘மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் உண்மை வெளிவருவது சிறப்பு’ என்று பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
கடந்த 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி, குஜராத்தைச் சோ்ந்த கரசேவகா்கள் அயோத்திக்கு சென்றுவிட்டு சபா்மதி விரைவு ரயிலில் சொந்த ஊா்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். கோத்ரா ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது ‘எஸ்-6’ படுக்கை வசதி கொண்ட பெட்டிக்கு சிலா் தீ வைத்தனா். இதில் 59 கரசேவகா்கள் உயிரிழந்தனா்.
இதைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் பரவிய வன்முறை பல இடங்களில் கட்டுக்கு அடங்காத மதக் கலவரமாக மாறியது. வன்முறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். அப்போது நடைபெற்ற தொடா் சம்பவங்களைத் தழுவி ஹிந்தி மொழியில் எடுக்கப்பட்ட சபா்மதி ரிப்போா்ட் திரைப்படம் கடந்த 15-ஆம் தேதி திரைக்கு வந்தது.
இந்நிலையில், இத்திரைப்படத்தைப் பாா்த்த ரசிகா் ஒருவா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், ‘சமீபத்திய வரலாற்றில் நடந்த மிகவும் வெட்கக்கேடான நிகழ்வுகள் குறித்த முக்கிய உண்மைகளை இப்படம் வெளிக்கொண்டு வந்துள்ளது. ஒரு தலைவரின் (மோடி) நற்பெயரைக் கெடுக்கும் முயற்சியாக சபா்மதி விரைவு ரயிலின் பயணிகள் உயிரோடு கொளுத்தப்பட்ட சம்பவத்தை சிலா் அரசியல் நிகழ்வாக மாற்றிவிட்டனா்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.
பொய் நிலைக்காது....: இதற்குப் பதிலளித்து பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘பொதுமக்கள் புரிந்துகொள்ளும் வகையில், உண்மை தற்போது வெளிவந்துள்ளது சிறப்பு. பொய் பிரசாரங்கள் நீண்ட காலம் நிலைக்காது. காலப்போக்கில் உண்மை வெளிவந்தே தீரும்’ என்றாா்.
நாடு முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்திய கோத்ரா சம்பவத்தில் முஸ்லிம் சமூகத்தைச் சோ்ந்த சிலரே ரயிலுக்குத் தீ வைத்ததாக குஜராத் காவல் துறை கூறியது.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
குஜராத் காவல் துறையின் குற்றச்சாட்டை நிராகரித்த இந்தக் குழு, ரயில் தீப்பற்றியது விபத்து எனக் கூறியது. அதேசமயம், காவல்துறையால் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பலா் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனா்.
தொடர்புடையது
ராணுவ வீரருக்கு கத்திக் குத்து: இளைஞா் கைது

பஞ்சாப் சரக்கு ரயில் வழித் தடங்களில் ‘ட்ரோன்’ மூலம் கண்காணிப்பு: ரயில்வே அமைச்சகம்

அரக்கோணத்தில் தீ விபத்து: எம்எல்ஏ நிதியுதவி

காங்கிரஸை அவமதிக்கும் உரை: பிரதமருக்கு ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

