தேர்தல் களத்தில் மறைமுகமாக பாஜகவை வலுப்படுத்தும் ஆர்எஸ்எஸ்!

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக களமிறங்கிய ஆர்எஸ்எஸ்.
ஆர்எஸ்எஸ் (கோப்புப் படம்)
ஆர்எஸ்எஸ் (கோப்புப் படம்)
Published on
Updated on
2 min read

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் முழுவீச்சில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற நவ. 20 அன்று நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜகவிற்கு வலுசேர்க்கும் விதமாக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் வீடுவீடாக பிரசாரம் மேற்கொண்டு சத்தமின்றி வாக்காளர்களைச் சந்தித்து வருகின்றனர்.

பாஜகவின் கருத்தியல் வழிகாட்டியான ஆர்எஸ்எஸ் அமைப்பு மகாராஷ்டிரத்தில் பாஜக வேட்பாளர்கள் வலுவாக இல்லாத தொகுதிகளில் அவர்களை வாக்கு வங்கியை உயர்த்த அதற்கான திட்டங்களுடன் செயல்பட்டு வருகின்றனர்.

நேரடியாக அரசியலில் ஈடுபடாத ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஹிந்துத்துவா, தேசியவாத பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவன் மூலம் பாஜக ஆதரவு பிரசாரத்தை மேற்கொள்வதாகக் கூறப்படுகிறது.

மேலும், பாஜக தனித்த அரசியல் உத்திகளுடன் செயல்படுகிறது. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில், ​​இரு அமைப்புகளும் தங்கள் பங்களிப்பை செய்து வருகின்றனர். ஆர்எஸ்எஸ் அதன் மறைமுக பங்களிப்பை தொடரும் அதே நேரத்தில், பாஜக நேரடி களத்தில் கவனம் செலுத்துகிறது.

இதுகுறித்துப் பேசிய பாஜக மூத்த தலைவர் ஒருவர் ”எதிர்க்கட்சிகளை நோக்கி பாஜக கள அரசியல் செய்துவரும் வேளையில், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் வீடுவீடாக சென்று மறைமுக பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் உள்ள நகரப் பகுதிகள் அனைத்திலும் ஆயிரக்கணக்காணக் கூட்டங்களை கரசேவகர்கள் தொடர்ந்து நடத்தி வந்துள்ளனர். ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று அரசியல் சூழ்ச்சிகளால் ஹிந்துத்துவம் பலவீனமடைந்து வருவதாகவும் அவர்கள் பேசி வருகின்றனர்.

ஒவ்வொரு கிராமங்கள் மற்றும் வார்டுகளிலும் ஆர்எஸ்எஸ் தொண்டர்களால் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. முக்கியமாக பாஜக வலுவின்றி இருக்கும் தொகுதிகளில் அதிகளவில் பிரசாரம் செய்யப்படுகின்றது.

ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “சாதிய பாகுபாடுகளைக் கடந்து ஹிந்துத்துவா மற்றும் பாரதத்திற்காக ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றுகூடவேண்டுமென்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஏனென்றால், இவை இரண்டும் உள் மற்றும் வெளிநாட்டு சக்திகளால் தொடர்ந்து குறிவைக்கப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.

பாஜகவுக்காக செய்யும் மறைமுக பிரசாரத்தில் ஹிந்துக்கள் வங்கதேசத்தில் ஒடுக்கப்படுவது குறித்தும், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் வாய் திறக்காமல் இருப்பது குறித்தும் தொடர்ந்து கரசேவகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

இது ஹிந்துத்துவத்திற்கும், பாரதத்திற்கும் எதிரான கேவலமான செயல்திட்டத்தை அம்பலப்படுத்துவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

வாக்குப்பதிவு தேதி அறிவிப்பதற்கு 6 மாதங்கள் முன்னரே மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்டில் ஆர்எஸ்எஸ் தனது தொண்டர்கள் மூலம் தேர்தலுக்கான வேலைகளைத் தொடங்கியுள்ளது. பாஜக தனது மஹாயுத்தி கூட்டணியின் தேர்தல் உத்திகளை ஆர்எஸ்எஸ் உடன் பகிர்ந்து பிராசரத்தை மேற்கொண்டுள்ளது.

“பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு பலவீனமாக அடையாளம் காணப்பட்ட முக்கிய தொகுதிகள் ஆர்எஸ்எஸ் உடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான ஆர்எஸ்எஸ் தொண்டர்கள், இந்துத்துவ மற்றும் பாரதத்தின் ஒற்றுமைக்கு ஆபத்தை எதிரொலிக்கும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் வாக்காளர்களைத் தங்கள் வசம் இழுக்கும் பணியைத் தொடங்கினர், ”என்று பாஜக வட்டாரம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com