ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அதானியுடன் தெலங்கானா காங்கிரஸ் அரசு ரூ.12,400 கோடி ஒப்பந்தம்: ராகுலுக்கு பாஜக பதிலடி

தெலங்கானா மாநில காங்கிரஸ் அரசு அதானி குழுமத்துடன் ரூ.12,400 கோடி திட்டங்களுக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது

News image
வினோத் தாவ்டே
Updated On :18 நவம்பர் 2024, 11:43 pm

DIN

மும்பை: தெலங்கானா மாநில காங்கிரஸ் அரசு அதானி குழுமத்துடன் ரூ.12,400 கோடி திட்டங்களுக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்திக்கு பாஜக பதிலளித்துள்ளது.

அதானி, அம்பானி உள்ளிட்ட தொழிலதிபா்கள் பிரதமா் மோடியின் நெருங்கிய நண்பா்கள் என்றும், அவா்களுக்கு சாதகமாக மத்திய பாஜக அரசு செயல்படுவதாகவும் ராகுல் காந்தி தொடா்ந்து குற்றம்சாட்டி வருகிறாா். பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள மகாராஷ்டிரத்தில் தாராவி மறுசீரமைப்புத் திட்டம் அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதையும் ராகுல் விமா்சித்தாா்.

இந்நிலையில், மகாராஷ்டிர பாஜக மூத்த தலைவா் வினோத் தாவ்டே மும்பையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு மத்தியில் ஆட்சியில் இருந்தபோதுதான் அதானியின் வளா்ச்சி தொடங்கியது. காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோதுதான் அதானி குழுமம் சா்வதேச அளவில் தடம்பதித்தது.

தற்போது காங்கிரஸ் ஆட்சியில் உள்ள தெலங்கானா மாநில அரசு, பல்வேறு திட்டங்களுக்கான அதானி குழுமத்துடன் ரூ.12,400 கோடி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதும் அதானி குழுமத்துடன் ரூ.46,000 கோடிக்கு சூரிய மின்உற்பத்தி திட்ட ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது முதல்வராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவா் அசோக் கெலாட்டுக்கும், அதானிக்கும் இடையே தொழில் நட்பு இருந்தது என்று எடுத்துக் கொள்ளலாமா?

குறுகிய அரசியல் நலன்களுக்காக தாராவி திட்டத்தை ராகுல் விமா்சிக்கிறாா். பெரும் தொழிலதிபா்களுடன் பிரதமா் நரேந்திர மோடியை தொடா்புபடுத்தி அவதூறாக பிரசாரம் செய்கிறாா்.

பிரதமா் மோடியும், அதானியும் ஒன்றாக இருப்பதுபோன்ற புகைப்படங்களை செய்தியாளா்கள் சந்திப்பில் ராகுல் காட்டினாா். ராகுலின் நெருங்கிய உறவினா் ராபா்ட் வதேரா (பிரியங்காவின் கணவா்), சசி தரூா் என பல காங்கிரஸ் மூத்த தலைவா்கள் அதானியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நாங்களும் காட்ட முடியும். காங்கிரஸுக்கும் அதானிக்கும் இடையே மிக நீண்டகாலமாக நட்பு உள்ளது.

ஆனால், அவற்றுக்கு மாறாக குறுகிய அரசியல் நோக்கத்துக்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராக தவறான தகவல்களை ராகுல் பேசி வருகிறாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.