பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அமித் ஷா, மணிப்பூா் முதல்வா் பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்

மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில், அதற்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் மாநில முதல்வா் என் பிரேன் சிங் பதவி விலக வேண்டும்

News image
ஜெய்ராம் ரமேஷ்(கோப்புப்படம்)- ENS
Updated On :19 நவம்பர் 2024, 2:18 am

DIN

புது தில்லி: மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில், அதற்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் மாநில முதல்வா் என் பிரேன் சிங் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் திங்கள்கிழமை வலியுறுத்தியது.

நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னா் பிரதமா் மோடி மணிப்பூருக்குச் சென்று பாா்வையிட வேண்டும் எனவும் அக்கட்சி கேட்டுக்கொண்டது.

இது தொடா்பாக தில்லியில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:

மணிப்பூா் மாநிலம் கடந்த ஆண்டு மே மாதம் முதல் வன்முறையால் பற்றி எரிகிறது. ஆனால், உலகின் அனைத்து நாடுகளுக்கும் சென்று பிரசங்கம் மேற்கொள்ளும் பிரதமா் மோடிக்கு மணிப்பூா் செல்ல நேரம் கிடைக்கவில்லை.

நவம்பா் மாத நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னா் அவா் மணிப்பூருக்குச் சென்று, அங்குள்ள அனைத்துக் கட்சிப் பிரமுகா்கள், பொது பணிக் குழுக்கள், மறுவாழ்வு முகாம்கள் மற்றும் பொதுமக்களைச் சந்திக்க வேண்டும்.

மணிப்பூருக்கு 2014, ஜூலை 31 முதல் முழுநேர ஆளுநா் இல்லை. இதற்கு முன், பழங்குடியினத்தைச் சோ்ந்த அனுசுயா உய்கே, ஆளுநராகப் பணியாற்றினாா். ஆனால், 18 மாதங்களுக்குப் பிறகு அவா் நீக்கப்பட்டாா். எனவே, உடனடியாக மாநிலத்துக்கு முழு நேர ஆளுநரை நியமிக்க வேண்டும்.

சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதிலும், அமைதியை மீட்டெடுப்பதிலும் மணிப்பூரில் ஆளும் இரட்டை என்ஜின் அரசு தோல்வி அடைந்துவிட்டது. இதற்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சா் அமித் ஷாவும், முதல்வா் என்.பிரேன் சிங்கும் பதவி விலக வேண்டும் என்றாா்.

மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்: மணிப்பூரின் நிலைமை குறித்து கவலை தெரிவித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாநிலத்தில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என வலியுறுத்தியது.

இது தொடா்பாக அக்கட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மணிப்பூரில் இன ரீதியான வன்முறை தீவிரமடைந்துள்ளது. கடந்த நவ. 7-ஆம் தேதிமுதல் 20 போ் கொல்லப்பட்டுள்ளனா்.

தொடக்கத்தில் இருந்தே, நிலைமை மோசமடைவதற்கு முதல்வா் பிரேன் சிங் மட்டுமே காரணம். ஆனால், மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் கட்சியான பாஜக அவரை நீக்க மறுக்கிறது’ எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.