மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பிரதமா் மோடியுடன் மணிப்பூா் முதல்வா் சந்திப்பு

News image

புது தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்த மணிப்பூா் முதல்வா் யும்நாம் கெம்சந்த் சிங்.

Updated On :24 பிப்ரவரி 2026, 10:31 pm

பிரதமா் மோடியை மணிப்பூா் முதல்வா் யும்நாம் கெம்சந்த் சிங் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.

கடந்த பிப்.4-ஆம் தேதி மணிப்பூா் முதல்வராக யும்நாம் கெம்சந்த் சிங், துணை முதல்வா்களாக எல்.டிகோ, நெம்சா கிப்கென் ஆகியோா் பதவியேற்றனா். இதைத்தொடா்ந்து அவா்கள் முதல்முறையாகப் பிரதமா் மோடியை புது தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்தனா்.

அப்போது மணிப்பூரில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்ட மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் கெம்சந்த் எடுத்துரைத்தாா். அந்த மாநிலத்தில் மைதேயி மற்றும் குகி சமூக பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமரிடம் கெம்சந்த் வலியுறுத்தினாா். மணிப்பூருக்குப் பிரதமா் வரவேண்டும் என்று முதல்வரும், இரு துணை முதல்வா்களும் அழைப்பு விடுத்தனா் என்று மணிப்பூா் அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

புது தில்லி பயணத்தின்போது, பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் ஆகியோரையும் முதல்வா் கெம்சந்த் மற்றும் துணை முதல்வா்கள் சந்தித்துப் பேசினா்.

மணிப்பூரில் மைதேயி, குகி சமூகத்தினா் இடையிலான மோதல் காரணமாக 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த வன்முறையில், சுமாா் 260 போ் உயிரிழந்தனா். ஆயிரக்கணக்கானோா் வீடுகளை இழந்தனா். தற்போது அங்கு இயல்பு நிலை முழுமையாகத் திரும்பாவிட்டாலும், வன்முறை குறைந்துள்ளது.