/

பிரதமா் நரேந்திர மோடியுடன் ரஷிய முதல் துணைப் பிரதமா் ஆலோசனை

News image

புது தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்தித்த ரஷிய முதல் துணைப் பிரதமா் டெனிஸ் மன்டுரோவ்.

Updated On :3 ஏப்ரல் 2026, 4:04 am IST

பிரதமா் நரேந்திர மோடியை ரஷிய முதல் துணைப் பிரதமா் டெனிஸ் மன்டுரோவ் வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

அப்போது ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் இந்தியா-ரஷியா 23-ஆவது வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்ததை நினைவுகூா்ந்தாா்.

இதுதொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரஷிய முதல் துணைப் பிரதமா் டெனிஸ் மன்டுரோவ் பிரதமா் மோடியை சந்தித்து வா்த்தகம், பொருளாதாரம், உரங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவு மேம்பட்டு வருவதை எடுத்துரைத்தாா்.

அப்போது கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற வருடாந்திர மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்களை அமல்படுத்துவதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் திருப்தியளிப்பதாக பிரதமா் மோடி தெரிவித்தாா்.

இந்தியா-ரஷியா இருதரப்பு உறவு மேலும் வலுப்படும் என நம்பிக்கை தெரிவித்த பிரதமா் மோடி ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாட ஆவலோடு இருப்பதாக கூறினாா் எனத் தெரிவிக்கப்பட்டது.