ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தல்: 11 மணி நிலவரம்!

மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலுக்கான 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்..

சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு

Published On :

மகாராஷ்டிர பேரவைத் தேர்தலுக்கான 11 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு இன்று(நவ. 20) ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, இங்குள்ள 288 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோல, ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 பேரவைத் தொகுதிகளில் முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கு கடந்த 13-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 38 தொகுதிகளுக்கு இன்று(நவ.20) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஜார்க்கண்ட், மகாராஷ்டிர ஆகிய இரு மாநிலங்களிலும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை வருகிற நவம்பர் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 18.14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மும்பையில் இதுவரை 15.78 வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதேபோன்று, ஜார்க்கண்ட் மாநிலத்​தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், காலை 11 மணி நேர நிலவரப்படி 31.37 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.