தீபாவளி விடுமுறை எதிரொலி: நாளை சென்னை மெட்ரோவில் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை!தீபாவளி விடுமுறை: நாளை (நவ. 9) ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!உலகில் காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் சென்னை! பட்டாசு கழிவுகளை அகற்ற சென்னையில் 600 தூய்மைப் பணியாளர்கள்!மேக்கேதாட்டு அணை: யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை: விஜய்க்கு கர்நாடக முதல்வர் பதில்!

ஜார்க்கண்ட் தேர்தல்: மொத்த வாக்குப்பதிவு நிலவரம்!

ஜார்க்கண்ட், மகாராஷ்டிரத்தில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது...

PTI

Updated On :

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் இறுதிக்கட்டமாக மீதமுள்ள 38 தொகுதிகளில் இன்று(நவ. 20) வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 12 மாவட்டங்களிலுள்ள 14,218 வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. முன்னதாக, முதல்கட்டமாக வாக்குப்பதிவுகடந்த 13-ஆம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கண்ட இடங்களில் 67.59 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முதல்கட்ட தகவலின்படி தெரிய வந்துள்ளது.

வரும் சனிக்கிழமை(நவ. 23) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அன்றைய நாளில், ஜார்க்கண்ட்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ‘ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் - ஆர்ஜேடி’ இணைந்துள்ள இந்தியா கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா அல்லது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றுமா என்பதற்கான விடை தெரிந்துவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.