மதுராந்தகம்: வாக்குச்சாவடியில் இயந்திரத்தில் பழுது - வாக்குப்பதிவு நிறுத்தம்டி20 தொடா் முதல் ஆட்டம்: இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இன்று மோதல்!தமிழகத்தில் அக். 19-ஆம் தேதியுடன் 9 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பதவிக் காலம் நிறைவு‘வெற்றிப் பயணம்’ திட்டம்: அரசுப் போக்குவரத்து ஊழியா்களுக்கு 17 வழிகாட்டு நெறிமுறைகள்!பிரேஸில் அதிபா் தோ்தல்: யாரும் 50% வாக்குகளை பெறாததால் அக். 25-இல் 2-ஆம் கட்ட தோ்தல்!இருதரப்பு வா்த்தகத்தை அதிகரிக்க இந்தியா-ஸ்விட்சா்லாந்து முடிவு: 5 ஒப்பந்தங்கள் கையொப்பம்மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

மதுராந்தகம், தாராபுரத்தில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருவதைப் பற்றி...

வாக்குப்பதிவு..

Published On :

மதுராந்தகம், தாராபுரம் (தனித்) தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை (அக். 6) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் வெற்றி பெற்ற அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சந்தியபாமா (தாராபுரம்) இவரும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

இதனால், இவ்விரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டு, மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய தனித்​தொகுதிகளில் இடைத்​தேர்​தலுக்​கான அறி​விப்​பாணையை கடந்த செப்​. 7-ஆம் தேதி தேர்​தல் ஆணை​யம் வெளி​யிட்​டது. வேட்​புமனு தாக்​கல் செப்​. 9-ல் தொடங்கி 16-ஆம் தேதி​ முடிவடைந்தது.

இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சி தமிழக வெற்றிக் கழகம், எதிர்க்கட்சி திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் இடது சாரிகள் என்று ஐந்து முனைப் போட்டி உருவானது.

இந்தத் இடைத்தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பேரவைத் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் இ.பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பி.சுகந்தி, நாதக சார்பில் ஜானகிராமன் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மொத்த வாக்காளர்கள் 2,13,788. இதில் ஆண்கள் 1,04,926, பெண்கள் 1,08,797, மூன்றாம் பாலினத்தவர் 65 பேர். வாக்குப் பதிவுக்காக 285 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, தாராபுரம் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் பி.சத்தியபாமா, திமுக சார்பில் செள.சுகன்யா, அதிமுக சார்பில் கே.பானுமதி, நாதக சார்பில் மு.கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ப. லட்சுமணன் ஆகிய பிரதான கட்சி வேட்பாளர்கள் உள்பட 22 பேர் களத்தில் உள்ளனர்.

இங்கு 1,07,285 ஆண் வாக்காளர்கள், 1,16,013 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவா் 8 பேர் உள்பட மொத்தம் 2,23,306 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்​குப்​ப​திவை முன்​னிட்டு மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய 2 தொகு​தி​களுக்​குள்பட்ட பகு​தி​களில் இன்று (அக். 6) பொது விடுமுறை வழங்​கப்​பட்​டுள்​ளது. இதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை வருகிற அக். 9-ஆம் தேதி நடை​பெறவுள்​ளது.

Summary

Polling for the by-elections in Maduranthakam and Dharapuram began on Tuesday (Oct. 6) morning and is currently underway.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER