யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்செய்யறிவு பயன்படுத்தி சிக்கிய மாணவர் தற்கொலை! ஐஐடி-மும்பை வளாகத்தில் போராட்டம்புரட்டாசி முதல் சனிக்கிழமை! காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!!ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

ஆம் ஆத்மியில் காங்., பாஜகவிலிருந்து வந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு!

அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் தில்லி பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பர்க்கப்படுகிறது

Published On :

புதுதில்லி: தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் வேட்பாளர்களாக காங்கிரஸ், பாஜகவிலிருந்து வந்தவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் 11 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று(நவ. 21) வெளியிடப்பட்டுள்ளது. அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் தில்லி பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பர்க்கப்படுகிறது. இந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே, மற்ற கட்சிகளை முந்திக்கொண்டு முன்கூட்டியே வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டிருப்பது தில்லி வட்டாரத்தில் அதிர்வலையை கிளப்பியுள்ளது.

அதில் கவனிக்கத்தக்க விஷயமாக, பாஜகவிலிருந்தும் காங்கிரஸ் கட்சியிலிருந்தும் ஆம் ஆத்மியில் அண்மையில் இணைந்த 6 பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 3 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

தில்லியில் கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி 62 இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.