அமெரிக்க முதலீடுகளை பயன்படுத்த மாட்டோம்! அதானி
அமெரிக்க முதலீடுகளை பயன்படுத்த மாட்டோம் என்று அதானி நிறுவனம் தெரிவித்திருப்பது பற்றி...


அமெரிக்காவிடம் இருந்து பெற்ற முதலீடுகளை பயன்படுத்த மாட்டோம் என்று அதானி க்ரீன் நிறுவனம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
சூரிய ஒளி மின்சார ஒப்பந்தத்தை பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ. 2,100 கோடி லஞ்சம் அளிக்க முன்வந்த அதானி, அதனை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் முதலீடுகளை பெற்றதாக நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைக்கு அதானி க்ரீன் நிறுவனம் சார்பில் வியாழக்கிழமை கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது.
அதில், “அமெரிக்க நீதித்துறையும், பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையமும் எங்கள் நிர்வாகக் குழு உறுப்பினர்களான கெளதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அமெரிக்காவிடம் இருந்து பெறப்பட்ட முதலீடுகளை பயன்படுத்த வேண்டாம் என்று எங்கள் துணை நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன.
இதனை தாங்களும் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் கடன் தருபவர்களிடம் இருந்து அதானி நிறுவனம் 300 கோடி டாலர் (இந்திய மதிப்புப்படி ரூ.25,000 கோடி) முதலீடாக பெற்றுள்ளதாக நீதிமன்றத்தில் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...