அதானிக்கு பிடிவாரண்ட்! அமெரிக்க நீதிமன்றம் பிறப்பித்தது!

அதானி மீது அமெரிக்காவில் வழக்கு பதிந்துள்ளது பற்றி...
கெளதம் அதானி
கெளதம் அதானிகோப்புப் படம்
Published on
Updated on
1 min read

இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அமெரிக்க முதலீடுகளை ஈர்த்து மோசடியில் ஈடுபட்ட வழக்கில் தொழிலதிபர் கெளதம் அதானிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், சூரிய ஒளி மின்சாரம் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்காவிடம் முதலீடுகளை பெற்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு என்ன?

சூரிய ஒளி மின்சாரம் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக 26 கோடி டாலர்கள்(இந்திய மதிப்புப்படி ரூ. 2,100 கோடி) லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு அதானி கொடுக்க முன்வந்துள்ளார்.

இந்த தகவல்களை மறைத்து, அமெரிக்காவில் இருந்து முதலீடுகளைப் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக நியூயார்க் நீதிமன்றத்தில் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் தரப்பில் புதன்கிழமை வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தீல் தாக்கல் செய்யப்பட்ட புகாரில், 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் ஜூலை 2021 மற்றும் பிப்ரவரி 2022 இடையேயான காலகட்டத்தில், ஒடிஸா, தமிழ்நாடு, ஜம்மு - காஷ்மீர், சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் மின் விநியோக ஒப்பந்தங்களை அதானி குழுமம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 16,800 கோடி ரூபாய் லாபம் ஈட்டக்கூடிய இந்த ஒப்பந்தங்களுக்காக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து, அமெரிக்க முதலீட்டாளர்கள் மற்றும் கடன் தருபவர்களிடம் இருந்து 300 கோடி டாலருக்கு மேல் கடனாகவும் பத்திரமாகவும் அதானி நிறுவனம் பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அரசின் உயர் அதிகாரிகளை பல்வேறு சந்தர்பங்களில் அதானியே நேரில் சந்தித்தற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நியூ யார்க் மாகாணத்தின் துணை அட்டர்னி ஜெனரல் லிசா மில்லர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புகாரில் இந்த குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வழக்கில் தொழிலதிபர் கெளதன் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, செளரவ் அகர்வால் உள்பட 7 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கெளதம் அதானி மற்றும் சாகர் அதானிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டை சர்வதேச சட்ட அமலாக்கத்துறைக்கு அனுப்பப்படவுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் 2-வது பணக்காரரும், உலகளவில் 22-வது பணக்காரருமான அதானி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து இதுவரை அதானி தரப்பும், மத்திய அரசு தரப்பிலிருந்தும் விளக்கம் அளிக்கவில்லை.

இணைப்பு
PDF
அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு
பார்க்க

ஏற்கெனவே, அதானி நிறுவனம் வெளிநாடுகளில் போலி நிறுவனத்தை உருவாக்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com