டிஜிட்டல் கைது மோசடி: 17,000 வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்

டிஜிட்டல் கைது மோசடியில் ஈடுபட்ட 17,000 வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன
டிஜிட்டல் கைது
டிஜிட்டல் கைது
Published on
Updated on
1 min read

டிஜிட்டல் கைது மோசடி: 17,000 வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்

நாடு முழுவதும் டிஜிட்டல் கைது எனும் பெயரில் நடந்த மோசடிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட 17 ஆயிரம் வாட்ஸ்ஆப் கணக்குகளை மத்திய உள்விவகாரத் துறை அமைச்சகம் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து கிடைத்திருக்கும் தகவலின்படி, இந்த வாட்ஸ்ஆப் கணக்குகள் பெரும்பாலும் கம்போடியா, மியான்மர், லாவோஸ், தாய்லாந்து நாடுகளிலிருந்து மோசடி போன்ற குற்றச்செயல்களுக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் மூலம், மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோசடி தொடர்பாக வந்த புகார்களை விசாரித்து, வாட்ஸ்ஆப் கணக்குளை ஆராய்ந்து, வாட்ஸ்ஆப் நிறுவனத்துக்கு இந்த எண்களை அனுப்பி முடக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்த மோசடிகள் பலவும், கம்போடியாவில் இருக்கும் சீன காசினோக்களில் இயங்கும் கால் செண்டர்கன் மூலம் நடப்பதாகவும், வேலை வாங்கித் தருவதாக கம்போடியா அழைத்துச் செல்லப்படும் இளைஞர்கள் அங்கு, இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுத்தப்படுவது குறித்தும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

டிஜிட்டல் கைது மோசடி என்பது, மோசடியாளர்கள் காவல்துறை அல்லது நீதித் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் போல, சாதாரண மக்களிடம் பேசி, அவர்கள் மீது ஒரு குற்றச்சாட்டை சுமத்தி, பெரிய அளவில் பணத்தை பரிமாற்றம் செய்தால், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்கலாம் என ஏமாற்றுவதாகும்.

இதில் மோசடியில் ஈடுபடுவோர் தங்களை காவல்துறை உயர் அதிகாரி, சிபிஐ அதிகாரி, வருமான வரித்துறை அதிகாரி, சுங்கத் துறை அதிகாரி போல காட்டிக்கொள்வார்கள். தவறுதலாக தங்களது பெயர் மோசடியில் சிக்கிக் கொண்டதைப் போல உணரும் மக்கள், எப்படியாவது இதிலிருந்து வெளியே வர வேண்டும் என்பதற்காக பணத்தைக் கொடுத்து ஏமாந்து விடுகிறார்கள்.

அண்மையில், பிரதமர் மோடி, இது பற்றி நாட்டு மக்களுக்கு எடுத்துக்கூறி, இதுபோன்ற அழைப்புகள் வந்தால், சைபர் பிரிவுக்கு புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தியிருந்தார்.

ஒவ்வொரு நாளும் இந்த மோசடியின் மூலம் சராசரியாக ரூ.6 கோடி மோசடி செய்யப்படுவதாகவும், முதல் 10 மாதங்களில் ரூ.2140 கோடி இதுபோன்ற மோசடிகள் மூலம் சாதாரண மக்களின் பணம் திருடப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com