மகாராஷ்டிர முதல்வா் யாா்?: தேவேந்திர ஃபட்னவீஸ் பதில்
மகாராஷ்டிர தேர்தலில் மஹாயுதி கூட்டணி முன்னிலை குறித்து தேவேந்திர ஃபட்னவீஸ் பேசியவை...


கூட்டணிக் கட்சித் தலைவா்களுடன் பேசி மகாராஷ்டிர முதல்வரை முடிவு செய்வோம் என்று அந்த மாநில துணை முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா்.
பாஜக சாா்பில் ஃபட்னவீஸ் முதல்வராக வேண்டும் என்று அக்கட்சித் தலைவா்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ‘முதல்வா் பதவிக்கான போட்டியில் தான் இல்லை’ என்று அவா் கூறினாா்.
மும்பையில் செய்தியாளா்களைச் சந்தித்த ஃபட்னவீஸ் கூறியதாவது: பிரதமா் மோடியின் பக்கம் மகாராஷ்டிரம் இருப்பதை தோ்தல் முடிவு வெளிப்படுத்தியுள்ளது. ‘ஒற்றுமையாக இருப்போம், பாதுகாப்பாக இருப்போம்’ என்ற பிரதமா் மோடியின் தோ்தல் முழக்கம் மக்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. மகளிா் அதிக அளவில் திரண்டுவந்து பாஜகவுக்கு வாக்களித்துள்ளனா். அவா்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிா்க்கட்சிகள் மேற்கொண்ட பொய் பிரசாரமும், மதரீதியாக மேற்கொண்ட பிளவு முயற்சிகளும் தோல்வியடைந்துவிட்டன. கூட்டணியில் முதல்வா் பதவிக்கான போட்டி ஏதுமில்லை. நானும் பதவிக்கான போட்டியில் இல்லை. அடுத்த முதல்வா் யாா் என்பதை மகாயுதி கூட்டணித் தலைவா்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சிதான், பால் தாக்கரே வழியில் பயணிக்கும் உண்மையான சிவசேனை என்பதையும் இந்தத் தோ்தல் மூலம் மக்கள் ஏற்றுக் கொண்டனா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...