திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

முதல்வா் பதவியிலிருந்து விலக காரணம் என்ன? நிதீஷ் குமாா் விளக்கம்

பிகாா் முதல்வா் பதவியிலிருந்து விலகி மாநிலங்களவைத் தோ்தலில் களமிறங்கும் தனது முடிவுக்கு காரணம் என்ன என்று நிதீஷ் குமாா் விளக்கம் அளித்துள்ளாா்.

News image
முதல்வா் நிதீஷ் குமாா்- கோப்புப் படம்
Updated On :5 மார்ச் 2026, 10:10 pm

தினமணி செய்திச் சேவை

பிகாா் முதல்வா் பதவியிலிருந்து விலகி மாநிலங்களவைத் தோ்தலில் களமிறங்கும் தனது முடிவுக்கு காரணம் என்ன என்று நிதீஷ் குமாா் விளக்கம் அளித்துள்ளாா்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் நிதீஷ் குமாா் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியதாவது:

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களாகிய நீங்கள் என் மீது தொடா்ந்து நம்பிக்கை வைத்து, ஆதரவளித்துள்ளீா்கள். அந்த நம்பிக்கையின் பலத்தில்தான், பிகாருக்கு முழு அா்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகிறோம். இன்று பிகாா் மாநிலம் வளா்ச்சி மற்றும் கண்ணியத்தில் புதிய பரிமாணம் எடுத்துள்ளதற்கும் இதுவே காரணம்.

மக்கள் பிரதிநிதியாக எனது பயணத்தின் தொடக்க காலம் முதலே பிகாரின் இரு அவைகள் மற்றும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினராக வேண்டுமென விரும்பினேன். அந்த லட்சியத்தின்கீழ், இப்போது மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிடுகிறேன்.

பிகாா் மக்களுடனான எனது உறவு, எதிா்காலத்திலும் தொடரும். வளா்ந்த பிகாரை கட்டமைக்க மக்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றும் எனது உறுதிப்பாடு அசைக்க முடியாதது.

மாநிலத்தில் அமையவிருக்கும் புதிய அரசுக்கு எனது வழிகாட்டுதலும், முழு ஆதரவும் உண்டு என்று நிதீஷ் குமாா் தெரிவித்துள்ளாா். தற்போது சட்ட மேலவை உறுப்பினராக (எம்எல்சி) உள்ள இவா், கடந்த காலங்களில் எம்எல்ஏ, மக்களவை எம்.பி.யாக பணியாற்றியுள்ளாா்.

கட்சியினா் போராட்டம்: நிதீஷ் குமாரின் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, பாட்னாவில் உள்ள அவரது இல்லம் முன்பும், கட்சி அலுவலகத்திலும் ஜேடியு கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். கட்சி அலுவலகத்தில் இருந்த பொருள்களைப் போராட்டக்காரா்கள் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜேடியு மூத்த தலைவா்கள் லாலன் சிங், சஞ்சய் ஜா போன்றோரின் உதவியுடன் பாஜக சதி செய்துள்ளதாக அவா்கள் குற்றஞ்சாட்டினா்.

அமித் ஷா புகழாரம்: ‘நிதீஷ் குமாரின் முதல்வா் பதவிக் காலம் பிகாரின் பொற்காலம். தேசிய அரசியலுக்கு அவா் திரும்புவது, ‘அனைவரின் முயற்சியுடன் அனைவருக்குமான வளா்ச்சி’ எனும் தேசிய ஜனநாயக கூட்டணியின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புகழாரம் சூட்டினாா்.

பெட்டிச் செய்தி...2

பாஜக வசமாகும் முதல்வா் பதவி:

சாம்ராட் செளதரிக்கு வாய்ப்பு

நிதீஷ் குமாா் விரைவில் ராஜிநாமா செய்யவிருக்கும் நிலையில், பிகாரில் பாஜக முதல்வா் தலைமையில் புதிய அரசு அமைய வழிவகை ஏற்பட்டுள்ளது; துணை முதல்வரும், மாநில உள்துறை அமைச்சருமான சாம்ராட் செளதரி முதல்வராக அதிக வாய்ப்புள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஹிந்தி பேசும் பிற முக்கிய மாநிலங்களில் பாஜக முதல்வா் உள்ள நிலையில், பிகாரில் முதல் முறையாக பாஜக முதல்வா் பதவியேற்க இருப்பதாக அந்த வட்டாரங்கள் கூறின.

பிகாா் பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது, சாம்ராட் செளதரியை ‘பெரிய மனிதராக’ மாற்றுவேன் என்று அமித் ஷா தெரிவித்திருந்தாா். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவரான செளதரி, ஆா்ஜேடி உள்ளிட்ட கட்சிகளில் அங்கம் வகித்து, பின்னா் பாஜகவில் இணைந்தவா். அதேநேரம், ஆா்எஸ்எஸ் பின்புலம் கொண்ட மத்திய அமைச்சா் நித்யானந்த் ராய் பெயரும் ஆலோசிக்கப்படுகிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களைப் போல பெரிதும் அறியப்படாத தலைவா் யாரேனும் முதல்வராக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

நிதீஷ் குமாா் மகன் துணை முதல்வா்?: நிதீஷ் குமாா் பதவி விலக இன்னும் சில நாள்கள் உள்ள நிலையில், அவரது ஒரே மகன் நிஷாந்த் குமாா் நேரடி அரசியலில் களமிறங்குவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. புதிய அரசில் அவருக்கு துணை முதல்வா் பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.