
மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு நடைபெற்று முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. இதுவரை வெளியான முடிவுகளின்படி, ஆளும் மகாயுதி கூட்டணி வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளும் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டது.
இதன் மூலம், ஆளும் பாஜக + சிவசேனை + தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும், இந்த முறை பாஜக தலைமையில்தான் கூட்டணி, பாஜக தலைவர்தான் முதல்வர் என்றும் ஏற்கனவே பேச்சுகள் அடிபடத் தொடங்கிவிட்டன.
மகாராஷ்டிரத்தில் மகா யுதி கூடட்ணி பெற்ற மகத்தான வெற்றிக்கு காரணம் என்ன? என்று ஆராய்ந்ததில் பல காரணிகள் முன்னால் வந்து நான்தான் என்கிறது.
இதையும் படிக்க.. 5.07 லட்சம் வாக்குகள்! இமாலய வெற்றியை நோக்கி பிரியங்கா!
மகளிர் உரிமைத் தொகை பெற்ற பெண்களும், விவசாய மானியத் திட்டத்தால் விவசாயிகளும் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்தால் நாம் பாதுகாப்பாக இருக்கலாம் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் பிரசாரமும், சரத் பவார் தீவிர பிரசாரத்தில் ஈடுபடாததும் என ஒரு சில காரணங்கள் மகா யுதி கூட்டணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்துள்ளன.
எல்லாவற்றையும் விட, கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலைக் காட்டிலும், இந்த முறை வாக்களித்த ஒட்டுமொத்த வாக்காளர்களில் 53 லட்சம் அதிகமான பெண்கள் வாக்களித்திருக்கிறார்கள்.
அதாவது மகா யுதி கூட்டணி அரசு, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறைவேற்றி வருகிறது. இந்த திட்டத்தில் 2.5 கோடி பெண்களுக்கு ரூ.1500 வழங்கப்படுகிறது. அது மட்டுமல்ல, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த தொகை ரூ.2100 ஆக உயர்த்தப்படும் எனவும் மகாயுதி வாக்குறுதி கொடுத்திருந்தது. இந்த வாக்குறுதியும், மகளிர் உரிமைத் தொகை திட்டமும்தான், மதம், இனங்களையெல்லாம் தாண்டி, பெண்களை மகாயுதிக்கு வாக்களிக்க வைத்திருக்கிறது என்கின்றன தரவுகள்.
ஆனால், மகா விகாஸ் அகாதி என்னவோ மாதம் ரூ.3000 கொடுப்பதாக உறுதிமொழி கொடுத்திருந்ததை மறந்திருப்பார்கள் போல.
அதுபோல, பாஜகவும் இந்த முறை மிகப்பெரிய வெற்றியைப் படைத்திருக்கிறது. இந்த ஒரு கட்சியின் வெற்றி எண்ணிக்கை, மகா விகாஸ் அகாதியின் ஒட்டுமொத்த வெற்றியைவிடவும் பெரியது. இதற்கும் அடிப்படைக் காரணம், பருத்தி மற்றும் சோயபீன்ஸ் விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட குறைந்த ஆதார விலை உறுதித் திட்டம்தான் என்கிறார்கள் அரசியல் ஆலோசகர்கள். பல காரணமாக அதிருப்தியில் இருந்த விவசாயிகளுக்கு இது மிகப்பெரிய ஆறுதலை ஏற்படுத்தியதும், அவர்களது வாக்குகளை வாரி வழங்கக் காரணமாகியிருக்கிறது.
மக்களவைத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த விதர்பா பகுதியில் இந்த முறை, வெற்றியை தனதாக்கிக் கொண்டிருக்கிறது மகா யுதி. காரணம், விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதியே காரணம் என்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.