மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மணிப்பூரில் எம்எல்ஏக்களின் வீடுகளுக்கு தீ வைத்த விவகாரம்: மேலும் 7 பேர் கைது

மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களின் வீடுகளுக்கு சேதம் விளைவித்த மற்றும் தீ வைத்து எரித்ததற்காக மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image

மணிப்பூர்(கோப்புப்படம்).

Updated On :24 நவம்பர் 2024, 6:11 am

மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களின் வீடுகளுக்கு சேதம் விளைவித்த மற்றும் தீ வைத்து எரித்ததற்காக மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த இரு நாள்களாக இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தனது அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. அதன்படி மேற்கு இம்பாலில் இருந்து நான்கு பேர் சனிக்கிழமையும், காக்சிங் மாவட்டத்தில் இருந்து மூன்று பேர் வெள்ளிக்கிழமையும் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கைதுகளுடன், சட்டப்பேரவை உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைத்ததற்காக கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 41ஐ எட்டியுள்ளது. மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அதைத் தொடா்ந்து, இரு சமூகத்தினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.

இதுவரை 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். அண்மையில், ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இந்த மோதலில் சிஆா்பிஎஃப் வீரா்கள் இருவா் காயமடைந்தனா். அதே மாவட்டத்தில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 6 போ் கடத்தி கொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து போராட்டங்கள் மீண்டும் வெடித்தன. நவ.16ஆம் தேதி மணிப்பூா் முதல்வரின் வீட்டை போராட்டக்காரர்கள் தாக்கியதுடன், அமைச்சா்கள் மற்றும் எம்எல்ஏ-க்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.