வன்முறைக்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பிய சம்பல்: பள்ளிகள் திறப்பு!
வன்முறைக்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பும் சம்பல்..

வன்முறைக்குப் பிறகு..

வன்முறைக்குப் பிறகு..
உத்தரப் பிரதேசத்தின், சம்பல் மாவட்டத்தில் நிகழ்ந்த வன்முறைக்குப் பிறகு படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பியது.
சம்பல் மாவட்டத்தில் வன்முறையின்போது துப்பாக்கிச்சூட்டில் மூவா் உயிரிழந்த நிலையில், அங்கு கலவரம் மூண்டது. கடந்த இரண்டு நாள்களாகப் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், இன்று மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
சம்பலில் மக்களின் இயல்பு வாழ்க்கை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பியது. அத்தியாவசிய பொருட்கள் விற்கப்படும் கடைகள் மீண்டும் செயல்படத் தொடங்கின. ஆனால் இணையச் சேவைகள் மட்டும் மக்களின் பாதுகாப்புக் கருதி இடைநிறுத்தப்பட்டுள்ளன.
வன்முறை நிகழ்ந்த இடத்தில் காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர், முக்கிய சந்திப்புகளில் பணியாளர்கள் மற்றும் விரைவு அதிரடிப் படைக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
நவம்பர் 30-ம் தேதி வரை வெளியாள்கள் சம்பாலுக்குள் நுழைய அதிகாரிகள் கட்டுப்பாடு விதித்துள்ளனர். மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நிலைமை அமைதியாகத் தோன்றினாலும், ஷாஹி ஜமா மசூதியைச் சுற்றியுள்ள பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
நவம்பர் 19ஆம் தேதி முதல் மசூதியில் ஹரிஹர் கோவில் இருப்பதாக ஒரு மனுவைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் முதன்முதலில் ஆய்வு செய்யப்பட்டபோது சம்பாலில் பதற்றம் நிலவியது. ஞாயிற்றுக்கிழமை, மசூதிக்கு அருகே ஏராளமான மக்கள் கூடி, ஆய்வுக் குழு மீண்டும் பணியைத் தொடங்கியபோது கோஷங்களை எழுப்பத் தொடங்கினர்.
அப்போது பாதுகாப்புப் படை வீரர்களுடன் மோதலில் ஈடுபட்ட அவர்கள், வாகனங்களை எரித்தும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
இந்த வன்முறையில் நான்கு பேர் இறந்துள்ளனர், மேலும் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் உள்பட 10.-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வன்முறை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...