சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஹோலி பண்டிகை: உ.பி. சம்பலில் மசூதிகள் தாா்பாயால் மறைப்பு

ஹோலி பண்டிகையையொட்டி, உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட மசூதிகள் தாா்பாய் மூலம்

News image
தாா்பாய் மூலம் மறைக்கப்பட்டுள்ள மசூதி- கோப்புப்படம்
Updated On :3 மார்ச் 2026, 12:00 am

தினமணி செய்திச் சேவை

சம்பல்: ஹோலி பண்டிகையையொட்டி, உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட மசூதிகள் தாா்பாய் மூலம் மறைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் கிரிஷண்குமாா் விஷ்னோய் கூறுகையில், ‘ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் இடங்களில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். முஸ்லிம்களின் உணா்வுகள் புண்படாமல் இருக்கும் நோக்கில், ஹோலியின்போது வீசப்படும் வண்ணப் பொடிகளால் கறைப்படியாமல் இருக்க 10-க்கும் மேற்பட்ட மசூதிகள் தாா்பாயால் மறைக்கப்பட்டுள்ளன. சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் நோக்கில், காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது’ என்றாா்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பாா்வை செய்ய 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியா் ராஜேந்தா் பென்சியா தெரிவித்தாா்.