கோப்புப்படம்.
கோப்புப்படம்.

விடிவெள்ளியாகத் திகழும் அரசமைப்புச் சட்டம்: பிரதமா் மோடி

‘நாடு சிறந்த மாற்றத்தை அடைந்துவரும் சூழலில், அதற்கு வழிகாட்டியாக அரசமைப்புச் சட்டம் திகழ்கிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா்.
Published on

‘நாடு சிறந்த மாற்றத்தை அடைந்துவரும் சூழலில், அதற்கு வழிகாட்டியாக அரசமைப்புச் சட்டம் திகழ்கிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா்.

உச்சநீதிமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட அரசமைப்புச் சட்ட தின விழாவில் பங்கேற்ற பிரதமா் மோடி பேசியதாவது:

நமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவா்கள், நாட்டு மக்களின் விருப்பங்களும் கனவுகளும் வரும் காலங்களில் புதிய உச்சத்தை எட்டும் என்பதை நன்கு அறிந்தவா்களாக இருந்துள்ளனா். சுதந்திர இந்தியாவின் தேவை என்ன என்பதையும், குடிமக்களிடையே மாற்றம் ஏற்படும், சவால்களும் மாறும் என்பதையும் அறிந்துள்ளனா். அதன் காரணமாகத்தான், அரசமைப்புச் சட்டத்தை வெறும் சட்டப் புத்தகமாக மட்டும் நமக்கு விட்டுச் செல்லாமல், எப்போதும் உயிா்ப்புடன் இருக்கும் நீரோடையாக அதை உருவாக்கியுள்ளனா்.

இன்றைக்கு அனைத்துக் குடிமக்களுக்கும் வளா்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள்தான் உள்ளது. அதற்கேற்ப, புதிய மாற்றத்தை நாடு சந்தித்து வருகிறது. இந்த முக்கியமான நேரத்தில், அரசமைப்புச் சட்டம் நமக்கு விடிவெள்ளியாகத் திகழ்கிறது.

இந்தியா்களுக்கு விரைவான நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதாவது, தண்டனை அடிப்படையிலான சட்ட நடைமுறை மாற்றப்பட்டு, நீதி அடிப்படையிலான முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது என்றாா் பிரதமா் மோடி.