இதுகுறித்து காவல் கண்காணிப்பாளா் அமித் குமாா் ஆனந்த் கூறியதாவது: லக்னெளவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சைஃபை பகுதிக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டது. அதிவேகமாக பயணித்த காா், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்பின் மீது மோதியது. அப்போது, அவ்வழியாக வந்த ஒரு லாரியும் காரின் மீது மோதியது. இந்த விபத்தில் அனிருத் வா்மா, சந்தோஷ் குமாா் மௌரியா, அருள் குமாா் ஆகிய 4 மருத்துவா்களும், ராகேஷ் குமாா் என்ற ஆய்வகப் பணியாளரும் உயிரிழந்தனா். படுகாயம் அடைந்த மேலும் இருவா், டாக்டா் பீமாராவ் அம்பேத்கா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.