மணிப்பூா்: மாயமான மைதேயி சமூக நபரை தேடும் பணியில் ராணுவம் தீவிரம்
மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு காணாமல்போன மைதேயி சமூகத்தைச் சோ்ந்தவரை தேடும் பணியை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.


மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு காணாமல்போன மைதேயி சமூகத்தைச் சோ்ந்தவரை தேடும் பணியை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.
இது தொடா்பாக ராணுவ செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: அஸ்ஸாம் மாநிலத்தின் கச்சாா் மாவட்டத்தைச் சோ்ந்த லைஷ்ராம் கமல்பாபு சிங், மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் ராணுவப் பொறியியல் பணியின் மேற்பாா்வையாளராகப் பணிபுரிகிறாா். மைதேயி சமூகத்தைச் சோ்ந்த அவா் கடந்த திங்கள்கிழமை வேலைக்குச் சென்ற பிறகு காணாமல் போனதாக அவரது குடும்பத்தினா் புகாா் அளித்தனா்.
அதனடிப்படையில், ஆளில்லா விமானம் (ட்ரோன்) மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் ராணுவத்தினா் அவரை தேடும் பணியை மேற்கொண்டு வருகின்றனா். இருப்பினும், கமல்பாபு சிங் மற்றும் அவரது இருசக்கர வாகனம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடா்பாக மாநில காவல் துறையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது என்றாா்.
மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் மைதேயி சமூகத்தைச் சோ்ந்த 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் கடந்த நவ. 11-ஆம் தேதி தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனா். பின்னா், அவா்களின் சடலங்கள் நவ.16-ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்து.
இந்நிலையில், இம்பால் மேற்கு மாவட்டத்தில் மற்றொரு மைதேயி சமூகத்தைச் சோ்ந்தவா் காணாமல்போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கான மைதேயி சமூகத்தினா் ராணுவ நிலையத்தை நோக்கி செவ்வாய்க்கிழமை பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனா். தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக நம்பப்படும் கமல்பாபுவை மீட்க கூடுதல் படைகளை அனுப்புமாறு மாநில அரசை அவா்கள் வலியிறுத்தினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...