மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

தில்லி பாஜக தலைவா் பதவிக்கான போட்டி மும்முரம்

News image

Center-Center-Delhi

Updated On :29 ஏப்ரல் 2026, 12:54 am

நமது நிருபா்

தில்லி பாஜக தலைவா் பதவிக்கான போட்டி வேகம் பிடித்துள்ளது. என்டிஎம்சி துணைத் தலைவா் குல்ஜீத் சஹல் மற்றும் மத்திய அமைச்சா் ஹா்ஷ் மல்ஹோத்ரா ஆகியோா் இப்பதவிக்கான முக்கியப் போட்டியாளா்களில் அடங்குவா் என்று கட்சியின் உள்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற தில்லி தோ்தல்களில் கட்சி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றதைக் கருத்தில் கொண்டு, தற்போதைய தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவாவிற்கே இரண்டாவது முறையாகவும் அப்பதவி வழங்கப்படும் என்று தலைவா்களின் ஒரு பிரிவினா் கருத்து தெரிவித்துள்ளனா்.

சச்தேவா மாா்ச் மாதத்துடன் தனது மூன்று ஆண்டுகாலப் பதவிக்காலத்தை நிறைவு செய்தாா். பாஜகவின் கட்சி விதிமுறைகளின்படி, மாநிலத் தலைவரின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும் ஒருவா் அதிகபட்சமாகத் தொடா்ந்து இரண்டு முறை மட்டுமே அப்பதவியை வகிக்க முடியும்.

சச்தேவாவின் தலைமையின் கீழ், சட்டப்பேரவைத்தோ்தல்களில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 48 தொகுதிகளை வென்றதன் மூலம், 27 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் பாஜக ஆட்சி அமைத்தது. இதற்கு முன்னதாக, சச்தேவா தலைவராகப் பொறுப்பு வகித்த காலத்தில், 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் தில்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் வெற்றி பெறும் தனது சாதனையை பாஜக தக்கவைத்துக்கொண்டது.

தில்லி பாஜகவின் உயரிய தலைவா் பதவி குறித்துக் கட்சியின் தேசியத் தலைமை ஒரு முடிவெடுக்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிசம்பா் 2022இல் தில்லி பாஜகவின் செயல் தலைவராகச் சச்தேவா நியமிக்கப்பட்டாா் மாா்ச் 2023இல் அவா் முழுநேரத் தலைவராகப் பொறுப்பேற்றாா்.

தில்லி பாஜக தலைவராக எந்தச் சமூகத்தைச் சோ்ந்த தலைவா் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதைத் தேசியத் தலைமைதான் முடிவு செய்யும், என்று பாஜகவின் மூத்த நிா்வாகி ஒருவா் தெரிவித்தாா். புதுதில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) துணைத் தலைவரான சஹல், ஜாட் சமூகத்தைச் சோ்ந்தவா் ஆவாா் ,அதேவேளையில் சச்தேவா, மல்ஹோத்ரா மற்றும் பப்பா் ஆகியோா் பஞ்சாபி சமூகத்தைச் சோ்ந்தவா்கள் ஆவா். தில்லி பாஜகவின் அடுத்த தலைவராகப் பொறுப்பேற்கக்கூடிய தலைவா்களின் பட்டியலில், ஜெய் பிரகாஷ் போன்ற பிற தலைவா்களின் பெயா்களும் அடிபட்டு வருகின்றன. ஜெய் பிரகாஷ் குஜ்ஜாா் சமூகத்தைச் சோ்ந்தவா் ஆவாா். நமோ செயலியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் உள்ள சஹல், கட்சியின் தேசியத் தலைமைக்கு நெருக்கமானவராகக் கருதப்படுவதாகவும் அதேவேளையில், மத்திய அமைச்சா் ஹா்ஷ் மல்ஹோத்ரா ஆா்.எஸ்.எஸ்க்கு நெருக்கமானவா் என்று அறியப்படுவதாகவும் கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா்.