
மணிப்பூரில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் இணைய சேவை துண்டிக்கப்பட்டிருந்தது. நிலைமை கட்டுக்குள் வராததால், தற்போது மேலும் இரு நாள்களுக்கு இணைய சேவை துண்டிப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மணிப்பூரின் ஜிரிபம் உள்பட 9 மாவட்டங்களில் நவ. 29ஆம் தேதி வரை இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநில உள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மணிப்பூரில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்து மதிப்பாய்வு செய்த பிறகு மேலும் இரு நாள்களுக்கு இணைய சேவை துண்டிப்பை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், காக்சிங், பிஷ்னுபூர், தெளபால், சூரசந்த்பூர், கங்போக்பி, பெர்ஸாவல் மற்றும் ஜிரிபம் ஆகிய பகுதிகளில் அடுத்த இரு நாள்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நவ. 16ஆம் தேதி நேரிட்ட கலவரத்தைத் தொடர்ந்து மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது.
சமூக விரோதிகள் சிலர் வன்முறையைத் தூண்டும் வகையிலான கருத்துகளைப் பகிர்வதால், சட்டம் - ஒழுங்கு சீர்கெடுவதைத் தவிர்க்கும் வகையில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போதுவரை மணிப்பூரில் இணைய சேவை துண்டிப்பு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
எனினும், பொதுமக்கள் வசதிக்காக மருத்துவ வசதிகள், கல்வி நிலையங்கள் மற்றும் இதர அரசு அலுவலகங்களில் மட்டும் இணைய சேவையை பயன்படுத்த விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | சமூக ஊடகங்களில் எல்லை மீறும் ஆபாசம்.! சட்டம் கடுமையாக்கப்படும்: மத்திய அரசு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.