ஜார்க்கண்ட் முதல்வர் பதவியேற்பு விழா: உதயநிதி பங்கேற்பு

ஜார்க்கண்ட் முதல்வராக மீண்டும் ஹேமந்த்சோரன் வியாழக்கிழமை மாலை(நவ.28) பதவியேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்
உதயநிதி ஸ்டாலின்-ஹேமந்த்சோரன்
உதயநிதி ஸ்டாலின்-ஹேமந்த்சோரன்
Published on
Updated on
1 min read

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் முதல்வராக ஹேமந்த்சோரன் வியாழக்கிழமை மாலை(நவ.28) பதவியேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில்,ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா 34 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 16, ராஷ்ட்ரீய ஜனதா தளம் 4, இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை) 2 இடங்களில் வெற்றி பெற்றன. இதையடுத்து, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைமையிலான கூட்டணி ஆட்சி மீண்டும் தொடா்வது உறுதியானது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 21, அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) ஆகியவை தலா ஒரு தொகுதியைக் கைப்பற்றின.

ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் புதிய எம்எல்ஏ-க்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை(நவ.24) நடைபெற்றது. இதில் சட்டப்பேரவைக் குழு தலைவராக ஹேமந்த் சோரன் தோ்வு செய்யப்பட்டாா்.

தொடா்ந்து ஆளுநா் மாளிகைக்குச் சென்று ஆளுநா் சந்தோஷ் கங்வாரிடம் ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரன் உரிமை கோரினாா். அப்போது, தனக்கு ஆதரவு அளிக்கும் கூட்டணிக் கட்சிகளின் கடிதங்களையும் அளித்தாா்.

ஜாா்க்கண்டில் ஆட்சி அமைக்க ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சித் தலைவா் ஹேமந்த் சோரனுக்கு மாநில ஆளுநா் சந்தோஷ் கங்வாா் அழைப்பு விடுத்தாா். இதையடுத்து, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் புதிய அரசு பதவியேற்கும் விழா வரும் 28-ஆம் தேதி நடைபெறும் என்று ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் தெரிவித்தார்.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் முதல்வராக ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் மூன்றாவது முறையாக வியாழக்கிழமை மாலை பொறுப்பேற்கிறார். அவருக்கு ஆளுநர்சந்தோஷ் கங்வாா் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந்த பதவியேற்பு விழாவில், இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மேகலயா முதல்வர் கொன்ராட் சர்மா, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2000-ஆம் ஆண்டு நவ. 15-இல் பிகாரை பிரித்து ஜாா்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது. அந்த மாநிலத்தின் முதல்வராக 4-ஆவது முறையாக ஹேமந்த் சோரன் பதவியேற்க இருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.