ஜம்மு-காஷ்மீர் இறுதிக்கட்டத் தேர்தல்: 5 மணி நிலவரம்!

ஜம்மு-காஷ்மீரில் இறுதிக்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
 வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் மக்கள்.
வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் மக்கள்.பிடிஐ
Published on
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீரில் இறுதிக்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

பிற்பகலுடன் ஒப்பிடுகையில் மாலை நேரத்தில் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி 65.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இறுதிக் கட்டத் தேர்தல் நடந்துவரும் 7 மாவட்டங்களில் பதிவாகியுள்ள வாக்குகள், மக்களவைத் தேர்தலில் பதிவாகியுள்ள வாக்குகளை விட அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வாக்கு சதவீதம் அதிகரிப்பு

ஜம்மு - காஷ்மீரில் நடைபெற்று முடிந்த முதல் இரு கட்டத் தேர்தல்களில் பதிவான வாக்குகளும், மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை விட அதிகம்.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டத் தோ்தல் அறிவிக்கப்பட்டது.

கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற 7 மாவட்டங்களில் நடைபெற்ற முதல் கட்டத் தோ்தலில் (24 தொகுதிகள்) 61.38 சதவீதம் பதிவானது. இதே 7 மாவட்டங்களில் மக்களவைத் தேர்தலின்போது 60 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது.

கடந்த 25-ஆம் தேதி 6 மாவட்டங்களில் நடைபெற்ற இரண்டாம் கட்டத் தோ்தலில் (26 தொகுதிகள்) 57.31 சதவீத வாக்குகள் பதிவாகின. இதே மாவட்டங்களில் மக்களவைத் தேர்தலின்போது 52.17 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின.

இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கான மூன்றாவது மற்றும் இறுதிக் கட்டத் தோ்தல் செவ்வாய்க்கிழமை (அக்.1) நடைபெற்று வருகிறது. இன்று மாலை 7 மணிவரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

40 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் 24 தொகுதிகள் ஜம்முவிலும், 16 தொகுதிகள் காஷ்மீரிலும் உள்ளன. முன்னாள் துணை முதல்வா்கள் தாரா சந்த் மற்றும் முஸாஃபா் பெக் உள்பட 415 வேட்பாளா்கள் களம்கண்டுள்ளனர்.

மாலை 5 மணி நிலவரப்படி உத்தம்பூர் தொகுதியில் 72.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சாம்பா - 72.41%, கதுவா - 70.53%, ஜம்மு - 66.79%, பந்திபோரா - 63.33%, குப்வாரா - 62.76%, பாரமுல்லா - 55.73% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com