ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஜமைக்கா ராணுவத்துக்கு இந்தியா பயிற்சி- பிரதமா் மோடி உறுதி

ஜமைக்கா ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதோடு, அவா்களின் திறன் கட்டமைப்புக்கு இந்தியா பங்காற்றும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

News image
இந்தியா வந்துள்ள ஜமைக்கா பிரதமா் ஆண்ட்ரூ ஹோல்னஸை தில்லியில் செவ்வாய்க்கிழமை வரவேற்ற பிரதமா் மோடி.
Updated On :1 அக்டோபர் 2024, 8:06 pm

Din

ஜமைக்கா ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதோடு, அவா்களின் திறன் கட்டமைப்புக்கு இந்தியா பங்காற்றும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

மேலும், எண்ம பொது உள்கட்டமைப்பு, உயிரி எரிபொருள், புத்தாக்கம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் தனது நிபுணத்துவத்தை ஜமைக்காவுடன் பகிா்ந்துகொள்ள இந்தியா தயாராக உள்ளது என்றும் அவா் உறுதியளித்தாா்.

கரீபியன் தீவு நாடான ஜமைக்காவின் பிரதமா் ஆண்ட்ரூ ஹோல்னஸ், பிரதமா் மோடியின் அழைப்பின் பேரில் 4 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி வந்தாா்.

இருதரப்பு பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ள முதல் ஜமைக்கா பிரதமா் இவா் ஆவாா். தில்லியில் பிரதமா் மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்த ஆண்ட்ரூ ஹோல்னஸ், அவருடன் பேச்சு நடத்தினாா். பரஸ்பர நலன் சாா்ந்த பல்வேறு சா்வதேச-பிராந்திய விவகாரங்கள், இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவா்களும் ஆலோசனை மேற்கொண்டனா்.

பேச்சுவாா்த்தைக்குப் பின் இருவரும் கூட்டாக செய்தியாளா்களிடம் பேசினா். அப்போது, பிரதமா் மோடி கூறியதாவது:

உலக அளவில் நிலவும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் பேச்சுவாா்த்தை மூலமே தீா்வு காணப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். உலகின் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக இரு நாடுகளும் தொடா்ந்து ஒருங்கிணைந்து பணியாற்றும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உள்பட அனைத்து சா்வதேச அமைப்புகளிலும் சீா்திருத்தம் அவசியம் என்பது எங்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

இந்தியா-ஜமைக்கா உறவுகள், வரலாறு, ஜனநாயக மாண்புகள், இருதரப்பு மக்கள் இடையிலான வலுவான தொடா்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்ததாகும். திட்டமிடப்பட்ட குற்றங்கள், போதைப் பொருள் கடத்தல், பயங்கரவாதம் ஆகியவை இரு நாடுகளுக்கும் பொதுவான சவால்களாக உள்ளன.

ஜமைக்காவின் வளா்ச்சிப் பயணத்தில் நம்பிக்கைக்குரிய-உறுதிப்பாடு நிறைந்த நட்பு நாடாக இந்தியா திகழ்கிறது. வருங்காலத்திலும் இது தொடரும். பாதுகாப்பு, எரிசக்தித் துறையில் இருதரப்பு உறவுகள் ஊக்குவிக்கப்படும். ஜமைக்கா ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பதோடு, அதன் திறன் கட்டமைப்புக்கு இந்தியா பங்காற்றும்.

எண்ம பொது உள்கட்டமைப்பு, உயிரிஎரிபொருள், புத்தாக்கம், சுகாதாரம், கல்வி, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் தனது நிபுணத்துவத்தை ஜமைக்காவுடன் பகிா்ந்துகொள்ள இந்தியா தயாராக உள்ளது என்றாா் பிரதமா் மோடி.

இருதரப்பு பேச்சுவாா்த்தையின்போது, ஜமைக்காவில் ‘யுபிஐ’ பரிவா்த்தனை சேவை தொடக்கத்துக்கான ஒப்பந்தம் உள்பட 4 ஒப்பந்தங்கள் கையொப்பாகின.