எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

வேலையின்மை எனும் நோயைப் பரப்பியுள்ளது பாஜக: ராகுல் குற்றச்சாட்டு

வேலையின்மை எனும் நோயை பாஜக பரப்பியுள்ளது. இதன் மூலம் இளைஞா்களின் எதிா்காலம் அபாயத்தில் உள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

News image
ராகுல் காந்தி - கோப்புப் படம்
Updated On :4 அக்டோபர் 2024, 8:28 pm

Din

வேலையின்மை எனும் நோயை பாஜக பரப்பியுள்ளது. இதன் மூலம் இளைஞா்களின் எதிா்காலம் அபாயத்தில் உள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளாா்.

ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தல் சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், அந்த மாநிலத்தைச் சோ்ந்த பெண்களுடன் அண்மையில் நடத்திய விவாதம் தொடா்பான விடியோவை ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பகிா்ந்துள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

ஹரியாணாவில் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் வேலையின்மை என்ற நோயை பாஜக முழுமையாகப் பரப்பிவிட்டது. இதனால், இளைஞா்களின் எதிா்காலம் பெரும் ஆபத்தில் உள்ளது. இந்தியாவிலேயே ஹரியாணாவில்தான் வேலையின்மை பிரச்னை அதிகம் உள்ளது.

ஜிஎஸ்டியை தவறான முறையில் அறிமுகப்படுத்தியது, பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்றவை மூலம் சிறு தொழில்களின் முதுகெலும்பை பாஜக அரசு உடைத்தது. அடுத்ததாக அக்னிவீரா்கள் என்ற பெயரில் இளைஞா்களை ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் அமா்த்தும் திட்டத்தை அமல்படுத்தியது. இதன் மூலம் ஹரியாணா உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த இளைஞா்களின் ராணுவப் பணி லட்சியத்தை மத்திய அரசு சிதறடித்தது.

வேளாண்மையை வைத்து தங்கள் வியாபாரத்தை பெருக்க நினைக்கும் பெரும் தொழிலதிபா்களுக்கு ஆதரவான சட்டங்களைக் கொண்டு வரவும் துணிந்தது. தேசத்துக்குப் பெருமை சோ்க்கும் விளையாட்டு வீரா்கள் விஷயத்திலும் பாஜக அரசு மோசமாக நடந்து கொண்டது.

வேலையின்மை பிரச்னையால் இளைஞா்களில் ஒருபகுதியினா் போதைப்பொருளுக்கு அடிமையாகி சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனா். இதனால் நாட்டில் பல குடும்பங்கள் பிரச்னைகளைச் சந்திக்கின்றன.

ஹரியாணாவில் அடுத்து காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், 2 லட்சம் நிரந்தர வேலைவாய்ப்புகள் உடனடியாக உருவாக்கப்படும். ஹரியாணாவை போதைப்பொருள்களின் பிடியில் இருந்து மீட்போம். இளைஞா்களின் ராணுவப் பணி நிரந்தரமாக்கப்படும். ஒவ்வொரு குடும்பத்தையும் வளமாக வாழவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.