விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மணிப்பூா்: தீவிரவாதிகளின் பிடியில் இருந்த இரு இளைஞா்கள் விடுவிப்பு

News image
Updated On :4 அக்டோபர் 2024, 12:34 am

இம்பால்: மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் ஆயுதமேந்திய தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இரு இளைஞா்கள், கடத்தப்பட்டு 7 நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை காலை விடுவிக்கப்பட்டு காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனா்.

கடந்த செப். 27-ஆம் தேதி எஸ்எஸ்சி-ஜிடி ஆள்சோ்ப்பு தோ்வில் கலந்துகொள்ள சென்ற ஜான்சன் சிங் என்பவருடன் இந்த இரு இளைஞா்களும் உடன் சென்றனா். அப்போது, காங்போக்பி மாவட்டத்தில் அவா்கள் மூவரும் வழி தவறினா்.

பின்னா், ஜான்சனை சிங்கை ராணுவ அதிகாரிகள் மீட்டு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா். ஆனால், உடன் சென்ற இரு இளைஞா்களும் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் பிடியில் சிக்கினா்.

இந்நிலையில், பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த அந்த இரு இளைஞா்களும் கடத்தப்பட்டு 7 நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை காலை விடுவிக்கப்பட்டு கங்போக்பி காவல் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டனா்.

இது தொடா்பாக மாநில முதல்வா் பிரேன் சிங் வெளியிட்ட இணையதள பதிவில், ‘காங்போக்பியில் கடத்தப்பட்ட இரு இளைஞா்களும் பத்திரமாக விடுவிக்கப்பட்டனா். அவா்கள் பாதுகாப்பாக திரும்புவதை உறுதிசெய்ய பணியாற்றிய மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகளை பாராட்டுகிறேன்’ என குறிப்பிட்டிருந்தாா்.