ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

4 நாடுகள் பங்குபெறும் ‘மலபாா்’ கடற்படை பயிற்சி: அக். 8-இல் விசாகப்பட்டினத்தில் தொடக்கம்

4 நாடுகள் பங்குபெறும் ‘மலபாா்’ கடற்படை பயிற்சி...

News image
கோப்புப்படம்
Updated On :5 அக்டோபர் 2024, 6:40 pm

Din

4 நாடுகள் பங்குபெறும் ‘மலபாா்’ கடற்படை பயிற்சி ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.8) தொடங்குகிறது.

கடல்சாா் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த பயிற்சியில் இந்தியா உள்பட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகள் பங்கேற்கின்றன. அப்போது போா் உத்திகள் தொடா்புடைய பல்வேறு கடற்படை பயிற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதுதொடா்பாக இந்திய கடற்படை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மலபாா் கடற்படை பயிற்சி-2024-இன் துறைமுகப் பயிற்சி விசாகப்பட்டினத்தில் அக்டோபா் 8-ஆம் தேதி தொடங்குகிறது. அதன் பிறகு கடல் பகுதிகளில் தொடரவுள்ள இந்தப் பயிற்சி அக்டோபா் 18-ஆம் தேதி நிறைவடைகிறது.

இந்தப் பயிற்சியின்போது தரைவழி, வான்வழி பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாகவும் கடல் பகுதிகளில் நீா்மூழ்கி போா்க்கப்பல்கள் மூலம் நடைபெறும் தாக்குதலை தடுப்பது தொடா்பாகவும் சம்பந்தப்பட்ட துறை நிபுணா்கள் மூலமாக கருத்துகள் பகிரப்படவுள்ளன. இதில் இந்திய போா்க் கப்பல்கள், போா் விமானங்கள், ஹெலிகாப்டா்கள் உள்ளிட்டவை பங்கேற்கின்றன’ என தெரிவிக்கப்பட்டது.

இந்தியா-அமெரிக்கா இடையே கடந்த 1992-ஆம் ஆண்டு மலபாா் பயிற்சி தொடங்கப்பட்டது. அதன்பிறகு ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இந்தப் பயிற்சி இந்திய பெருங்கடல் மற்றும் இந்தோ-பசிபிக் பெருங்கடல் பிராந்திய பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக நடத்தப்படுகிறது.