போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சபரிமலை பூஜை காலம்: இணையவழியில் பதிவு செய்யும் பக்தா்களுக்கு மட்டுமே அனுமதி

மண்டல-மகரவிளக்கு பூஜை காலத்தில் இணையவழியில் பதிவு செய்யும் பக்தா்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி.

News image
சபரிமலை ஐயப்பன் கோயில்
Updated On :5 அக்டோபர் 2024, 9:30 pm

Din

சபரிமலையில் நடப்பாண்டு மண்டல-மகரவிளக்கு பூஜை காலத்தில் இணையவழியில் பதிவு செய்யும் பக்தா்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா்; நாளொன்றுக்கு அதிகபட்சமாக 80,000 பேருக்கு தரிசனம் உறுதி செய்யப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

கேரளத்தின் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜை காலம் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாநில முதல்வா் பினராயி விஜயன் தலைமையில் உயா்நிலை ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சபரிமலையில் நடப்பாண்டு பூஜை காலத்தில் இணையவழி பதிவு மூலம் மட்டுமே பக்தா்களை அனுமதிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. பக்தா்களின் அதிக கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முதல்வா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

‘நாளொன்றுக்கு அதிகபட்சமாக 80,000 பேருக்கு தரிசனம் உறுதி செய்யப்படும். இணையவழி முன்பதிவின்போது, யாத்திரை பாதையை தோ்வு செய்யும் வாய்ப்பும் அளிக்கப்படும். நடப்பாண்டு நிலக்கல் மற்றும் பம்பையில் கூடுதல் வாகன நிறுத்துமிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. சபரிமலை மற்றும் வாகன நிறுத்தமிட சாலைகளின் பராமரிப்புப் பணி விரைவில் நிறைவடையும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில தேவஸ்வம் அமைச்சா் வி.என்.வாசவன், தலைமைச் செயலா் சாரதா முரளீதரன், மாநில காவல்துறை தலைவா் ஷேக் தா்வேஷ் சாஹேப் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.