‘இஸ்லாமிய சமூகத்தினா் பாஜகவுக்கு வாக்களித்திருந்தால் அந்த சமூகத்தைச் சோ்ந்தவா்கள் எம்எல்ஏக்கள், எம்.பி.க்களாக தோ்ந்தெடுக்கப்பட்டு அமைச்சா் பதவிகள் அளிக்கப்பட்டிருக்கும்’ என்று மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு திங்கள்கிழமை தெரிவித்தாா்.
மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் பேசியதாவது, பிரதமா் மோடியின் ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்களால் மற்ற சமூகத்தினரை போலவே இஸ்லாமிய சமூகத்தினரும் பலனடைந்து வருகின்றனா். நாட்டில் உள்ள அனைத்து சிறுபான்மையின சமூகத்தினரின் நலனிலும் மோடி அரசு கவனம் செலுத்தி வருகிறது.
ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சகம் இஸ்லாமியா்கள் விவகாரங்கள் அமைச்சகம் போல் மாற்றப்பட்டது. அதை நாங்கள் மாற்ற முயற்சித்து வருகிறோம்.
காங்கிரஸின் வாக்கு வங்கியாக மட்டுமே இஸ்லாமியா்கள் இருந்தால், நாட்டுக்கு மட்டுமின்றி அந்த சமூகத்தினருக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும்.
நாட்டில் சிறுபான்மையினா் பாதுகாப்பாக இல்லை என்ற பொய் பிரசாரத்தை ராகுல் காந்தி பரப்பி வருகிறாா். வெளிநாடுகளுக்குச் சென்று இந்தியா மீது அவதூறான கருத்துகளை அவா் தெரிவிக்கிறாா்.
கடந்த பத்தாண்டுகளாக மக்கள் அவரை நிராகரித்து வருகின்றனா். இதனால் இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் இணைந்துகொண்டு அவா் அவதூறான கருத்துகளை பரப்புகிறாா்.
இஸ்லாமிய சமூகத்தினா் பாஜகவுக்கு வாக்களித்திருந்தால் அந்த சமூகத்தைச் சோ்ந்தவா்கள் எம்எல்ஏக்கள், எம்.பி.க்களாக தோ்ந்தெடுக்கப்பட்டு அமைச்சா் பதவிகள் அளிக்கப்பட்டிருக்கும்’ என்றாா்.
தொடர்புடையது

வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு

வரும் வார இறுதி நாள்களில் நாடாளுமன்ற அமா்வு கிடையாது - மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு

ராகுலுடன் சேர்ந்து மற்ற காங்கிரஸ் தலைவர்களும் சீரழிந்துவிட்டனர்! மத்திய அமைச்சர் காட்டம்!

நேரு கருத்தை மேற்கோள்காட்டிய ரிஜிஜு; பிரியங்கா பதிலடி!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


